விஜய்க்கு சிக்கலாக உருவெடுத்த அஜித் குமார்.. கரூர் கேசில் சிபிஐ செக்.. இன்று இரவு செல்லும் விஜய்

By Shyamsundar I

சென்னை: கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பு தவெக நிர்வாகிகளை கடுமையாக விசாரித்து வருகிறது. விஜய் தரப்பு யோசித்ததை விட மிக கடுமையாக விசாரணை செல்வதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இன்று இரவு விஜய் டெல்லி செல்கிறார். நாளை இவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

சென்னையில் சிபிஐ அலுவலகம் இருந்தாலும் கூட தவெக தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிரில் செய்தனர். கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.


TVK Vijay

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.

டெல்லிக்கு அழைத்த சிபிஐ

கரூர் தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆஜராகும்படி விஜய்க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். அவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."

"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை என்பதால் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று இரவு விஜய் டெல்லி செல்கிறார். நாளை இவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

முன்னதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் நடத்தினர்.

ஒரே கேள்விகளை வேறு வேறு கோணங்கள்

முக்கியமாக ஒரு சில கேள்விகளை பல்வேறு கோணங்களில் மாற்றி மாற்றி சிபிஐ எழுப்பி உள்ளனர். பேப்பர் ஒன்றில் எழுதிக்கொடுத்து அதில் பதில்களை நிரப்ப கூறி உள்ளனர். இதில் சில கேள்விகள் கடுமையானதாகவும்.. குழப்ப கூடியதாகவும்.. எப்படி பதில் அளித்தாலும் சிக்கலை ஏற்படுத்த கூடியதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் பின் வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,

கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து வந்தனர்?

சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணத்திட்டத்தை வகுத்தது யார்?

செப்டம்பர் 27 அன்று மதியம் 3 மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தும், நண்பகல் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கச் சொன்னது யார்?

விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது, சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா?

கூட்டத்தில் மயக்கமடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சைத் தொடர்ந்தார்? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.

விஜய்க்கு சிக்கலாகும் டிரைவர் அஜித் குமார்

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய அஜித்குமார், முக்கிய சாட்சியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த நாளில் நடந்த நிகழ்வுகளின் வரிசையை அஜித்குமாரிடம் விரிவாகக் கேள்வி கேட்டுள்ளனர். அன்றைய தினத்திற்கான அசல் திட்டம் என்ன, கரூருக்கு பயணிக்க டிரைவருக்கு எப்போது அறிவுறுத்தல்கள் கிடைத்தன, மற்றும் அவர் சம்பவ இடத்தை எப்போது அடைந்தார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

காவல்துறை அவருக்கு ஏதேனும் வழிமுறைகளை வழங்கியதா அல்லது வாகனத்தை சாலையின் எதிர் திசையில் நிறுத்தும்படி யார் அறிவுறுத்தினார் என்றும் விசாரிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டச் சொன்னது யார், சம்பவம் நடந்தபோது அவர் வாகனத்திற்கு முன்னால் தனிப்பட்ட முறையில் எதைக் கண்டார் என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.

சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது குறித்தும் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கெல்லாம் அஜித் குமார்.. விஜய்க்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு சிக்கலை ஏற்படும் சில கடுமையான பதில்களை அவர் கூறியதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு நிலைமை தெரிந்ததா, சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும் ஏன் பேச்சு தொடர்ந்தது என்றும் அஜித்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. வாகனத்திற்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து விஜய்க்கு யார் தகவல் தெரிவித்தனர் என்பதை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் விஜய்யை சிக்க வைக்கும் சில பதில்களை அவர் அளித்துள்ளாராம்.

கூடுதலாக, அஜித்குமாரும் விஜயும் தவிர, சம்பவம் நடந்தபோது வாகனத்திற்குள் யார் யார் இருந்தார்கள் என்று அடையாளம் காட்டும்படி அஜித்குமாரிடம் கேட்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பங்கு மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து இதில் கேள்விகள் கேட்கப்பட்டது.

இந்த விசாரணையில் 90-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அஜித்குமார் அளித்த பதில்கள் மற்றும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Credit: Oneindia

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X