மக்களே டிச.31க்குள் இந்த வேலையை முடிக்கலனா... ஜனவரி முதல் தங்க நகை வாங்க முடியாது!!

By Devika Manivannan

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது . சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்றைய தேதிக்கு ஒரு கிராம் 13 ,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது .ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி பார்த்தால் நீங்கள் ஒரு சவரன் நகை வாங்குவதற்கு குறைந்தது 1.20 லட்சம் ரூபாயை கொடுத்தாக வேண்டும். இரண்டு பவுன் நகை வாங்குகிறீர்கள் என்றால் இரண்டரை லட்சம் ரூபாய் உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும். இந்தியாவில் ஒரு விதிமுறை இருக்கிறது ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பணமாக கொடுத்து தங்கம் வாங்க முடியாது . இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகவும் அதற்கு மேல் வரக்கூடிய பணத்தை காசோலை அல்லது டிஜிட்டல் பரிமாற்ற முறையில் தான் செலுத்த வேண்டும்.


gold pan aadhaar

அதேபோல ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட தங்க நகை வாங்குகிறீர்கள் எனும் போது நகைக்கடை உரிமையாளர்கள் நிச்சயம் உங்களிடம் பான் கார்டை கேட்பார்கள். வருமான வரி சட்டத்தின் பிரிவு 114 பி-இன் கீழ் ஒரு தனி நபர் ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து தங்கம் வாங்குகிறார் எனும் போது நிச்சயம் பான் கார்டை சமர்ப்பித்தாக வேண்டும்.

2 லட்சம் ரூபாய் வரையிலான தங்கம் வாங்குபவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை ஆனால் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலுத்தினால் கூட பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. நகை விற்பனை செய்யக்கூடிய கடைகள் இந்த பரிவர்த்தனையை வருமானவரித்துறையிடம் உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு தகவல் அளித்தாக வேண்டும்.

PAN- Aadhaar இணைப்பு: டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே கெடு!! போனிலேயே மேற்கொள்வது எப்படி?

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனைத்து அதிகபட்ச மதிப்பு கொண்ட நகை விற்பனையும் நகைக்கடை உரிமையாளர்கள் பதிவு செய்தாக வேண்டும். அப்போது யாருக்கு விற்பனை செய்தார்ல்களோ அவர்களின் பான் எண்ணையும் குறிப்பிட்டாக வேண்டும். தற்போது நகை விற்பனை செய்யக்கூடிய விலையில் பார்க்கும்போது நீங்கள் இரண்டு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட பான் கார்டு நிச்சயம் தேவைப்படும் .

மக்களே இதை எல்லாம் முடிக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள்!! முதல்ல இந்த Checklist பாருங்க!!

வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இல்லை என்றால் ஜனவரி 1 முதல் உங்களின் பான் கார்டு செயல் இழந்து போய்விடும். எனவே டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள் இல்லை என்றால் உங்களால் இரண்டு பவுனுக்கு மேல் தங்க நகை கூட வாங்க முடியாது.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X