தங்கம், வெள்ளி விலை: வரலாற்றில் இல்லாத சரிவு..! எல்லாம் 950 செய்யும் மேஜிக்..!

By Devika Manivannan

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மிக வேகமாக சரிவடைந்து வருகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

தினமும் தங்கம், விலை உயர்வு உயர்வு என கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் இன்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஏனெனில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு மூன்றே நாட்களில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு குறைந்து இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய தினம் 14,900 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று ஒரு கிராம் இன்று 950 ரூபாய் விலை குறித்து 13,950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Gold silver investment

ஒரு சவரனுக்கு இன்று ஒரே நாளில் 7,600 ரூபாய் தங்கத்தின் விலை சரிந்திருக்கிறது. நேற்று 1,19 ,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 1,11, 600 ரூபாயாக விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 9,500 ரூபாய் விலை சரிந்து 1,39,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 1037 ரூபாய் விலை குறைந்து 15,218 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 8,296 ரூபாய் குறைந்து 1,21,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 800 ரூபாய் விலை குறைந்து 12,000 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 6,400 ரூபாய் விலை குறைந்து 96,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அம்பானி, அதானிக்கு மத்திய பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட்!! இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா??

கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் தலா 950 ரூபாய் என சரிவடைந்திருக்கிறது. அப்படி பார்த்தால் வெள்ளி, சனி, திங்கள் ஆகிய இந்த மூன்று வர்த்தக நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 2,850 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும் போது 22, 800 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.

SGB: தங்கம் பத்திரம் வாங்கியவர்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு..? முதல்ல இதை படிங்க..!!

வீடுகளில் திருமணம் போன்ற நிகழ்வுகளை வைத்திருப்பவர்கள், தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த விலை குறைவு மிகச் சிறந்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மூன்றே நாட்களில் தங்கம் விலை இப்படி தடாலடியாக குறைவது என்பது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எனவே விலை ஏறி விட்டதே என புலம்பியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

அடுத்ததாக வெள்ளியின் விலையை பொறுத்த வரை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து இருக்கிறது. நேற்று 320 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 20000 ரூபாய் விலை குறைந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று வர்த்தக நாட்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1, 25,000 ரூபாய் குறைந்து இருக்கிறது .

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X