தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது!! உடனே கடைக்கு போங்க!!

By Devika Manivannan

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று மாலை முதல் குறைய தொடங்கியுள்ளது.

சென்னையில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நேற்று காலை வரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அதிகபட்சமாக ஜனவரி 5ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு கண்டது . இந்த நிலையில் நேற்று மாலை முதல் தங்கம் விலை குறைய தொடங்க இருக்கிறது.


Gold silver investment

நேற்று மாலை 12,800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 50 ரூபாய் விலை குறைந்து 12,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் இன்று 400 ரூபாய் விலை குறைந்திருக்கிறது . நேற்று மாலை 1,02,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 1,02,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,27,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை சரிந்திருக்கிறது. நேற்று 13964 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 13,909 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 550 ரூபாய் விலை சரிந்து 1,39,090 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை குறைந்து 10,640 ரூபாய்க்கும் ஒரு சவரன் 320 ரூபாய் விலை குறைந்து 85,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் ஒரே நாளில் 5000 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 272 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,72,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா அரசாங்கம் வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கையே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. இதற்கு ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் எப்படி எதிர்வினை ஆற்றும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் நிலவியதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி முதலீடு செய்தனர். இதனால் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.

1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

வெனிசுலா தரப்பில் எதிர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்ற சூழல் உறுதியாகி இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தைகளை நோக்கி திரும்ப செல்ல தொடங்கி இருக்கின்றனர் . டிமாண்ட் குறைந்து தங்கம், வெள்ளியின் விலையும் குறைந்திருக்கிறது.தற்போது இருக்கக்கூடிய இந்த விலை குறைவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X