டிரம்ப் பற்ற வைத்த நெருப்பு: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!! இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?
2025 ஆம் ஆண்டில் உலக அளவில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்தது, 2026 ஆம் ஆண்டிலாவது அதற்கு ஒரு ரெஸ்ட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் பற்றவைத்த ஒரு நெருப்பு தங்கம் விலையை மீண்டும் உயர்த்த செய்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
உலக அளவில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையே போர்பதற்றம் உண்டாகிறது , ஒரு ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கிறது உள்ளிட்டவை நிகழும் போதெல்லாம் உடனடியாக தங்கத்தின் விலையில் தான் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நிலையற்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தை நோக்கி தான் திருப்புவார்கள். எனவே தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து அதன் விலை உயரும்.

அந்த வகையில் டிரம்ப் அரசு வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கையால் உலக சந்தையிலும் சரி உள்ளூர் சந்தையிலும் சரி தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது . இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று 12,600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 12,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்துள்ளது . நேற்று 1,00,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரண தங்கம் இன்று 1,01,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி ஒன்றாம் தேதி அன்று தங்கத்தின் விலை சற்றே குறைந்தது ஆனால் அதன் பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது ஒரு சவரனுக்கு 1920 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 87 ரூபாய் விலை உயர்ந்து 13,833 சவரன் 696 ரூபாய் விலை உயர்ந்து 1,10, 664 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை உயர்ந்த 10,575 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் விலை உயர்ந்து 84, 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்திருக்கிறது. சென்னையில் நேற்று 257 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 8,000 விலை உயர்ந்து 2 ,65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் பார்க்கும்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,407 டாலர்களாக இருக்கிறது அதாவது ஒரே நாளில் சுமார் 2 சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 75.38 டாலராக ஒரே நாளில் 5.20 சதவீதம் உயர்வு தந்திருக்கிறது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் , வெள்ளி விலைகள் உயர்வு கண்டுள்ளன. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1, 37, 196 ரூபாயாகவும் , ஒரு கிலோ வெள்ளியின் விலை 2.67 சதவீதம் அதிகரித்து 2,42,637 ரூபாயாகவும் இருக்கின்றன.
Credit: Goodreturns


Click it and Unblock the Notifications











