Gold Rate Today: சவரனுக்கு ரூ.3,360 குறைந்த தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க.. 2வது நாளாக சரிவு!

By Yogeshwaran Moorthi

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் ரூ.12,600க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன், ரூ.1,00,800க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன.


Gold Rate Gold Price Chennai

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தங்கம் விலை கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது.

அதன் உச்சமாக டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இதனால் தங்கம் சாமானிய மக்களிடையே எட்டாகனியாக மாறிவிடும் என்று பலரும் சோகம் அடைந்தனர். அவ்வப்போது தங்கம் விலை சற்று இறங்கினாலும், மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் அளவிலேயே நிற்கிறது. இதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைய தொடங்கி இருக்கிறது.

நேற்றை பொறுத்தவரை தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ரூ.13,020க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் வெள்ளி அதிரடியாக உயர்ந்து வந்த சூழலில், நேற்று ரூ.4 குறைந்து ரூ.281க்கு விற்பனையாகியது. இந்த நிலையில் 2வது நாளாக தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் ரூ.12,600க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன், ரூ.1,00,800க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனையாகி வருகிறது. புத்தாண்டு நெருங்கிவிட்ட சூழலில், தங்கம் விலை சரிவை சந்தித்திருப்பது சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Credit: Oneindia

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X