IND vs NZ: ஆல் ரவுண்டருக்கு கடைசி வாய்ப்பு.. அர்ஷ்தீப் உள்ளே.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன?

By Aravinthan

இந்தூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 18) இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளதால், இன்றைய போட்டி ஒரு வாழ்வா? சாவா? யுத்தமாக அமைந்துள்ளது.

ராஜ்கோட்டில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுத்து, சொந்த மண்ணில் கில்லி தாங்கள் தான் என்பதை இந்திய அணி நிரூபிக்குமா? அல்லது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி தனது முதல் ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


IND vs NZ 3rd ODI Arshdeep Singh Likely to Return Do-or-Die Chance for Nitish Reddy

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மீது அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் வெளிப்படையாகவே அவரை விமர்சித்திருந்தார். "வாய்ப்புகள் கொடுத்தாலும் அவர் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்துவதில்லை" என்று கூறியிருந்தார்.

எனவே, இன்றைய போட்டியில் நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அது அவருக்குத் தன்னை நிரூபிப்பதற்கான கடைசி வாய்ப்பாக அமையலாம். இதில் சோபிக்கத் தவறினால், அடுத்து வரும் முக்கியத் தொடர்களில் அவர் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் வெளியில் உட்கார வைக்கப்பட்ட இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுத்தாலும், ரன்களை வாரி வழங்குவது அணிக்குத் தலைவலியாக உள்ளது. எனவே அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியில் மாற்றம் இருக்குமா?

இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, தனது அணியில் எந்த மாற்றமும் செய்யாது என்றே தெரிகிறது. அதே வீரர்களுடன் களமிறங்கி கோப்பையைத் தட்டிச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா
சுப்மன் கில் (கேப்டன்)
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
நிதிஷ் குமார் ரெட்டி
குல்தீப் யாதவ்
ஹர்ஷித் ராணா
முகமது சிராஜ்
அர்ஷ்தீப் சிங் (பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக)

WPL 2026: சதம் மிஸ்ஸானாலும் மாஸ் காட்டிய ஸ்மிருதி மந்தனா.. டெல்லியை துவம்சம் செய்த ஆர்சிபி!

நியூசிலாந்து உத்தேச ஆடும் லெவன்:

டெவோன் கான்வே
ஹென்றி நிக்கோல்ஸ்
வில் யங்
டேரில் மிட்செல்
கிளென் பிலிப்ஸ்
மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்)
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்)
சாக் ஃபௌல்க்ஸ்
கிறிஸ்டியன் கிளார்க்
கைல் ஜேமிசன்
ஜெய்டன் லெனாக்ஸ்

Credit: Mykhel

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X