IND vs NZ ஒருநாள் தொடர்.. ஹர்திக் பாண்டியா, பும்ராவுக்கு அணியில் இடமில்லை.. பிசிசிஐ போட்ட திட்டம்

By Aravinthan

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

தற்போது உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக இருக்கும் இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

முதல் போட்டி: ஜனவரி 11 (வதோதரா)
இரண்டாவது போட்டி: ஜனவரி 14 (ராஜ்கோட்)
மூன்றாவது போட்டி: ஜனவரி 18 (இந்தூர்)


India vs New Zealand ODI Series Hardik Pandya and Jasprit Bumrah Likely to be Rested

ஹர்திக் பாண்டியா ஏன் இல்லை?

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா அசுர ஃபார்மில் இருந்தார். 3 இன்னிங்ஸ்களில் 142 ரன்கள் குவித்து, 186.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டினார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் மற்றும் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இருப்பினும், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பணிச்சுமையை நிர்வகிக்கும் அடிப்படையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ஹர்திக் பாண்டியா கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில்தான் ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவுக்கும் ஓய்வு:

அதேபோல், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. பும்ரா கடைசியாக 2023 உலகக்கோப்பையில் விளையாடினார். அவருக்கும் டி20 உலகக்கோப்பைக்காகப் பாதுகாப்பாக ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் முழு உடற்தகுதியுடன் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ஓய்வு அளிக்கப்படுகிறது.

இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை என்றாலும், பிசிசிஐ-யின் புதிய விதிமுறைப்படி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும். அதன்படி, ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் குர்னால் பாண்டியா தலைமையிலான பரோடா அணிக்காக விஜய் ஹசாரே தொடரின் கடைசி சில லீக் ஆட்டங்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி எப்போது இணைவார்?

மறுபுறம், விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி சதம் அடித்த விராட் கோலி, அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார். ஆனால், ஜனவரி 6-ம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கோலி மீண்டும் டெல்லி அணிக்காகக் களமிறங்குவார். அந்தப் போட்டியை முடித்துவிட்டு, அவர் நேரடியாக இந்திய அணியுடன் நியூசிலாந்து தொடருக்கு இணைவார்.

சுப்மன் கில் டூ கரன்பீர் சிங், ரச்சின்.. 2025இல் அதிக ரன் குவித்த முதல் 10 வீரர்கள் பட்டியல்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, வரும் ஜனவரி 4 அல்லது 5-ம் தேதி நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Credit: Mykhel

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X