IND vs WI: களத்தில் இறங்கிய கங்குலி.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான பிட்ச் குறித்து ஆய்வு

By Aravinthan

கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முக்கியமான போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிக்குச் செல்லும் அணியை முடிவு செய்யும் காலிறுதிக்கு இணையான போட்டியாக இது அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான ஆடுகளம் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வகையில் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான தட்டையான ஆடுகளமாக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆடுகளம் சரியாக அமைந்திருப்பதை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தானே நேரில் சென்று ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார்.


India vs West Indies Eden Gardens Pitch Report Sourav Ganguly inspected the pitch and made sure it is even for bat and ball

ரன் மழை பொழியும் ஆடுகளம்

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து அணி இத்தாலிக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோரைப் பதிவு செய்தது. அதே ஆடுகளத்தில்தான் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியும் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் இத்தாலி அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்காட்லாந்து சுழற்பந்து வீச்சாளர் மைக்கேல் லீஸ்க் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனவே, இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சற்று கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குலி நேரில் ஆய்வு

போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி ஆடுகளத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஈடன் கார்டன் தலைமை ஆடுகளப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி மற்றும் பிசிசிஐ தலைமை ஆடுகளப் பராமரிப்பாளர் ஆஷிஷ் பௌமிக் ஆகியோருடன் ஆடுகளத்தின் தன்மை குறித்து கங்குலி விரிவாக ஆலோசனை நடத்தினார். ஆடுகளத்தின் தயாரிப்பு குறித்து கங்குலி முழு திருப்தி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும்

இது குறித்துப் பேசிய ஆடுகளப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி, "இது வழக்கமான ஈடன் கார்டன் ஆடுகளத்தைப் போலவே அதிக ரன்கள் குவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதேசமயம் பந்துவீச்சாளர்களுக்கும் இதில் சாதகமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக மாலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் ஆட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்" என்று எச்சரித்துள்ளார். இதனால் டாஸ் வெல்லும் அணி பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் செமி பைனல் போகுதோ இல்லையோ.. இந்தியாவுக்கு இதுதான் நடக்கும்.. வன்மத்தை கக்கிய அமீர்

யாருக்கு சாதகம்?

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இங்கு ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்குச் சற்று சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், 2016 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றது.

இருப்பினும், ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை எந்தவொரு சர்வதேச டி20 போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. இங்கு இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியையே சந்தித்துள்ளது இந்திய அணிக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

PAK vs SL: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. இலங்கை தோற்றாலும் மிரட்டல் ஆட்டம்!

கடந்த கால சர்ச்சைகள்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் ரன் குவிக்கச் சிரமப்பட்டு வரும் நிலையில், ஈடன் கார்டன் ஆடுகளம் தட்டையாக அமைக்கப்பட்டிருப்பது அணிக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்பட்டதால் இந்திய அணி பேட்டிங்கில் கடும் சரிவைச் சந்தித்தது.

அப்போது ஆடுகளம் பராமரிப்பு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் காரணமாகவே இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான ஆடுகளத்தை சவுரவ் கங்குலி மிகவும் கவனமாக ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Credit: Mykhel

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X