அப்படி போடு.. தங்கம், வெள்ளியின் மதிப்பை நிர்ணயம் செய்ய புது ரூல்ஸ்.. ஏப்ரல் 1 முதல் அமல்!

By Muthuraj

செபி (SEBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India ) ஆனது, பரஸ்பர நிதி திட்டங்களால் (Mutual fund schemes) வைத்திருக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பை நிர்ணயிப்பதற்கு, எக்ஸ்சேஞ்சால் வெளியிடப்பட்ட போல்டு ஸ்பாட் விலைகளை (Exchange-published polled spot prices) பயன்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.

செபியின் இந்த புதிய விதிமுறைகள் தற்போது உள்ள அளவுகோல் உடன் இணைக்கப்பட்ட அணுகுமுறையை மாற்றுவது மட்டுமின்றி, சீரான தன்மையை கொண்டு வருவதையும், உள்நாட்டு சந்தை நிலைமைகளை பிரதிபலிப்பதை மதிப்பீடுகள் உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு உள்ளன.


new-rule-for-gold-silver-etf-from-sebi-came-to-effect-from-2026-april-1

செபியின் புதிய விதி என்ன சொல்கிறது? கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின் படி, சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) ஆனது 2026 ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளது.

இதன் கீழ் பிஸிக்கல் ஆக டெலிவர்டு செய்யப்படும் கோல்ட் மற்றும் சில்வர் டெரிவேட்டிவ்ஸ் கான்டராக்ட்களில் பயன்படுத்தப்படுவதை போலவே.. பரஸ்பர நிதிகள் ஆனது அங்கீகரிக்கப்பட்ட பங்கு சந்தைகளால் வெளியிடப்பட்ட போல்டு ஸ்பாட் விலைகளைப் பயன்படுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியை மதிப்பிட வேண்டும் என்று முடிவு செய்யப்படும்.

மேலும் - அவ்வப்போது ஒழுங்குமுறை ஆணையத்தால் குறிப்பிடப்படும் ஸ்பாட் போலிங் வழிகாட்டுதல்களுக்கு (Spot polling guidelines) ஸ்பாட் போலிங் வழிமுறை (Spot polling mechanism) இணங்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது. பரஸ்பர நிதி ஆலோசனை குழுவில் விவாதங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பொது ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிஎம்ஏ அடிப்படையிலான விலை நிர்ணயத்திலிருந்து மாற்றம்: தற்போது, ​​இடிஎப் (ETF) எனப்படும் எக்ஸ்சேன்ஜ் டிரேடெட் பண்ட்ஸ் (Exchange Traded Funds) வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஆனது, லண்டன் புல்லியன் சந்தை சங்கத்தின் (London Bullion Market Association - LBMA) ஏஎம் நிர்ணய விலைகளின் (AM fixing prices) அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. உள்நாட்டு மதிப்பீடுகளை அடைய ஒரு நோஷனல் பிரீமியம் அல்லது டிஸ்கவுண்ட்டும் காரணியாக கொள்ளப்படுகிறது.

தற்போதுள்ள அமைப்பின் கீழ், எல்பிஎம்ஏ விலைகள் மெட்ரிக் மற்றும் நாணய மாற்றங்கள் (Metric and currency conversions) மற்றும் போக்குவரத்து செலவுகள் (Transportation costs), சுங்க வரி (customs duty), பொருந்தக்கூடிய வரிகளை (Applicable taxes and levies) சேர்ப்பதன் மூலம் சரி செய்யப்படுகின்றன.

இந்த புதிய விதி எப்போது நடைமுறைக்கு வரும்? திருத்தப்பட்ட இந்த கோல்ட் மற்றும் சில்வர் மதிப்பீட்டு விதிமுறைகள் ஆனது வருகிற ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட செபி (பரஸ்பர நிதிகள்) விதிமுறைகள், 2026 அமலுக்கு வருவதோடு ஒத்துப்போகிறது.

செபியின் இந்த மாற்றம் - தங்கம் மற்றும் வெள்ளி இடிஎப் முதலீட்டாளர்களுக்கு என்ன மாதிரியான கொண்டுவரும்? புதிய செபி விதிமுறைகள் ஆனது தங்கம் மற்றும் வெள்ளி இடிஎப்-கள் இப்போது சர்வதேச அளவுகோல்களுக்கு பதிலாக உள்நாட்டு மாற்று இட விலைகளை பயன்படுத்தி மதிப்பிடப்பட வழிவகுக்கும்

முதலீட்டாளர்களுக்கு, இது நிகர சொத்து மதிப்பு (NAV) கணக்கீடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான தன்மையை கொண்டு வரு, இது திட்டங்களை ஒப்பிடுவதையும் எளிதாக்கும். தங்கம் மற்றும் வெள்ளி இடிஎப்-கள் அடிப்படை உலோக விலைகளை கண்காணிக்கும் அதே வேளையில், மதிப்பீட்டு நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள், செயல்திறன் மற்றும் பணப்புழக்கத்தைக் கண்காணித்தல் ஆகியவைகள் - திட்டங்கள் முழுவதும் வருமானத்தில் சிறிய மாறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு சீரான ஸ்பாட் அடிப்படையிலான மதிப்பீட்டு வழிமுறை அத்தகைய முரண்பாடுகளை குறைத்து முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டை மேம்படுத்தும். இந்த மாற்றத்திற்கான காரணத்தை விளக்கிய செபி, பங்கு சந்தைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கத்தேவைகளுக்கு உட்பட்டவை என்பதால், அத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ஸ்பாட் விலையை பயன்படுத்துவது உள்நாட்டு சந்தை நிலைமைகளை பிரதிபலிக்கும் மதிப்பீட்டிற்கு வழிவகுக்கும், மேலும் மதிப்பீட்டு நடைமுறைகளில் சீரான தன்மையை உறுதி செய்யும் என்கிறது.

Credit: Gizbot

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X