மாம்பழம் வட மாவட்டங்களில் நசுங்குதே ? பாமகவின் அப்பா–மகன் சண்டை.. சிதறும் ஓட்டுகளை அள்ளும் விஜய்

By Hema Vandhana

சென்னை: பாமகவின் உட்கட்சி பூசலுக்கு இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதிகார பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி இவர்கள் இருவரின் கூட்டணி யாருடன்? என்பதை தமிழக அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி வருகின்றன.. குறிப்பாக வடமாவட்டங்களில், பாமகவின் செல்வாக்கு இன்னமும் அதே வாக்கு வங்கி பலத்துடன் உள்ளதா? என்ற சந்தேகத்தையும் சமீபகால நிகழ்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டு அரசியலில் வடமாவட்டங்கள் எப்போதும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு காலத்தில் பாமக வலுவான சமூக-அரசியல் அடித்தளத்தை உருவாக்கியிருந்தது.


North Tamil Nadu PMK Vijay

வட மாவட்டங்கள் வாக்குகள்

அதிமுகவுக்கு அடுத்தபடியாக, மாநில அளவில் சுமார் 4 சதவீத மொத்த வாக்குகளையும், வடமாவட்டங்களில் உள்ள சுமார் 50 தொகுதிகளில் 8 முதல் 10 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்ற கட்சியாக பாமக கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்த வலிமை பெரிதும் சரிந்து விட்டதாகவே அரசியல் சூழல் சுட்டிக்காட்டுகிறது.

இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக பாமகவுக்குள் நீடிக்கும் அப்பா-மகன் மோதல் பார்க்கப்படுகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - பாமக தலைவர் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடுகள், கட்சியை உள்ளுக்குள்ளே பலவீனப்படுத்தி வருகிறது... முக்கியமாக, மகன் மீது சிபிஐ விசாரணை கோரி தந்தையே டெல்லி செல்வது போன்ற நிகழ்வுகள், தொண்டர்களிடையே கடும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்கின.

பாமக உள்கட்சி பூசல்

அரசியல் எதிரிகள் கூட வைக்காத குற்றச்சாட்டுகளை, கட்சியின் நிறுவனர் முன்வைப்பது, பாமக எந்த அளவுக்கு உள்கட்சி சிக்கலில் சிக்கியுள்ளது என்பதற்கான வெளிப்படையான உதாரணமாக அமைந்து வருகிறது.

இதனுடன் சேர்ந்து, பாமகவின் கூட்டணி அரசியல் மீதும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றுவது பாமகவின் வழக்கமாக இருந்தாலும், அன்புமணி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாஜக கூட்டணியில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்து வருவது கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

வாக்கு வங்கி

குறிப்பாக திமுகவைத் தவிர்த்து, அதிமுக அல்லது பாஜவுடன் கூட்டணி அமைக்கும்போது பாமகவின் பாரம்பரிய வாக்கு வங்கி சரிவடைந்ததாக பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் விளைவாக கட்சி தேர்தல் தோல்விகளையும், அங்கீகாரம் இழக்கும் அபாயத்தையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம். தொண்டர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் கடும் எதிர்ப்பையும் மீறி, அன்புமணி பாஜவுடன் கூட்டணி வைத்தார். பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படுதோல்வி ஏற்பட்டது. இதன் பின்னணியில், அன்புமணியை மிரட்டி கூட்டணிக்கு உடன்பட வைத்ததாகவும், மத்திய அமைச்சர் பதவிக்கான ஆசையில் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அடகுவைத்துவிட்டதாகவும் சொந்த கட்சியிலிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டாக்டர் ராமதாஸ் - அன்புமணி

இந்த சூழலில் பாமக இரண்டாகப் பிளவுபட்டால் வாக்குகள் முற்றிலும் சிதறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான், ராமதாஸை சமாதானப்படுத்தி கூட்டணியில் தொடர வைக்க வேண்டும் என்று அமித்ஷா 'அசைன்மென்ட்' கொடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

டாக்டர் ராமதாஸை சமாதானப்படுத்த குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்ளிட்ட சுமார் 16 பேர் வரை நடுவர் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டணியும் உறுதியான வடிவம் பெறாமல், பாமக மேலும் அரசியல் தனிமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாமக ஓட்டுகள் யாருக்கு

இந்த சூழ்நிலையில், பாமக ஓட்டுக்கள் யாரிடம் செல்லும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலத்தைப் பார்த்தால், 2011 தேர்தலில் பாமக, விசிக வாக்குகள் விஜயகாந்த் பக்கம் நகர்ந்ததை நாம் பார்த்தோம். அதே மாதிரியான ஒரு அரசியல் மாற்றம், இப்போது நடிகர் விஜய் தலைமையிலான தவெக நோக்கி நடக்கக்கூடும் என்ற கணிப்பு வலுவாக பேசப்படுகிறது.

விக்ரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டுக்கு பிறகு, வடமாவட்டங்களில் விஜய்க்கான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தலித் சமூக இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகி வருகிறது. விழுப்புரம், கடலூர், வேலூர் பகுதிகளில் நடந்த தவெக கூட்டங்கள், கட்சியின் அடித்தள கட்டமைப்பு மெதுவாக வலுப்பெறுவதை காட்டுகின்றன.

வடமாவட்ட வாக்கு வங்கி வெற்றிடம்

மேலும், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை தனது அரசியல் அடையாளங்களாக விஜய் முன்வைப்பது, சமூக நீதி, கல்வி, சமத்துவம் போன்ற கருத்துகளை வடமாவட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுகிறது. இது பாமக, விசிக வாக்கு வங்கியில் இருந்து ஒரு பகுதியை தவெக பக்கம் ஈர்க்கக்கூடும்.

மொத்தத்தில், உட்கட்சி சண்டையால் பலவீனமடைந்துள்ள பாமக, தனது பாரம்பரிய வாக்கு வங்கியை இழக்கும் அபாயத்தில் உள்ளது. அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்ப முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது.. இந்த முயற்சி எவ்வளவு வெற்றி பெறும் என்பது வரும் தேர்தல் அரசியலில்தான் தெளிவாகும்.

ஆனால், வடமாவட்ட அரசியலில் ஒரு புதிய சலசலப்பு இப்போதே தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதி... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Credit: Oneindia

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X