பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

By Devika Manivannan

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.


Pongal Tamilnadu Ration token

ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்தனர். கடந்த சில நாட்களாகவே இந்த பணி நடைபெற்றது . இந்த டோக்கனில் குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டைதாரர் எந்த தேதியில் எந்த நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல் பரிசு தொகையையும் பெறவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் அந்த நேரத்தில் இவர்கள் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகையையும் தொகுப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு ரேஷன் கடை ஊழியர்கள் வரும் போது சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் இல்லாமல் போயிருக்கலாம், அல்லது தவறுதலாக விடுபட்டிருக்கலாம். எனவே டோக்கன் கிடைக்கப்பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது.

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!

உங்களுடையது அரிசி ரேஷன் அட்டை ஆனால் டோக்கன் வரவில்லை என்றாலும் உங்களுடைய ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசு தொகையும் கட்டாயம் கிடைக்கும் . நீங்கள் நேரடியாக உங்களின் ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம். அவர்கள் உங்களுக்கான டோக்கனை வழங்குவார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் தேதியில் நீங்கள் பரிசு தொகை பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!

ரேஷன் கடைகளில் எந்த தெருவை சேர்ந்த மக்களுக்கு எந்த நாளில் விநியோகம் என எழுதி வைத்திருப்பார்கள். டோக்கன் இல்லை என்றாலும் அந்த தேதியில் சென்று டோக்கன்கள் முடிந்ததும் கடைசியாக வாங்கி கொள்ளலாம். இல்லை என்றால் டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு என ஒரு சிறப்பு விநியோக தேதி அறிவிக்கப்படும். அந்த நாளில் சென்று நீங்கள் பொங்கல் பரிசு தொகுப்பு அல்லது பொங்கல் பரிசு தொகையை வாங்கிக் கொள்ளலாம்.

எனவே டோக்கன் கிடைக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது என மக்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். உங்களுடையது அரிசி அட்டை என்றால் கட்டாயம் உங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.

Credit: Goodreturns

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X