SA20: 205 ரன் குவித்தும் சூப்பர் ஓவர்.. 'சூப்பர்மேனாக' மாறிய JSK வீரர் ஃபெர்ரைரா.. த்ரில்லர் மேட்ச்

By Aravinthan

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக் தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் (DSG) அணியும் மோதிய போட்டியில், பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்துத் துறைகளிலும் தனி ஆளாக நின்று ஜொலித்த டோனோவன் ஃபெர்ரைரா, தனது அணியை சூப்பர் ஓவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

SA20 லீக்கின் 9-வது லீக் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணியும், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் (DSG) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜோகன்னஸ்பர்க் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைக் குவித்தது.


SA 20 JSK vs DSG Donovan Ferreira s All-Round Heroics Lead Joburg Super Kings to Thrilling Super Over Win in SA20

இமாலய இலக்கை நோக்கி ஆடிய டர்பன் அணியும் 20 ஓவர் முடிவில் சரியாக 205 ரன்களை எட்ட, ஆட்டம் 'டை' (Tie) ஆனது. வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டி 'சூப்பர் ஓவர்' முறைக்குச் சென்றது. அதில் ஜோபார்க் சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் முழுப் பெருமையும் ஜேஎஸ்கே அணியின் டோனோவன் ஃபெர்ரைராவையே சேரும். முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஃபெர்ரைரா, கடைசி நேரத்தில் மைதானத்தில் அதிரடி காட்டினார். வெறும் 10 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 4 இமாலய சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்களை விளாசித் தள்ளினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 330 ஆக இருந்தது. இவரது இந்த அதிரடி ஆட்டமே அணி 205 ரன்களை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தது. அணியில் சுபம் ரஞ்சனே (50), கேப்டன் டு பிளெசிஸ் (47) ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

பேட்டிங்கோடு தனது பணி முடிந்துவிட்டது என்று அவர் ஓய்வெடுக்கவில்லை. பந்துவீச்சிலும் கலக்கிய டோனோவன் ஃபெர்ரைரா, 4 ஓவர்கள் வீசி வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த ஆடுகளத்தில், இவரது சிக்கனமான பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது.

ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றபோது, விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டார் ஃபெர்ரைரா. அந்த இக்கட்டான சூழலில் மிகக் கூர்மையாகச் செயல்பட்டு ஒரு முக்கிய ரன்-அவுட் செய்தார். இதனால் டர்பன் அணி சூப்பர் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய சிஎஸ்கே.. சிக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. காரணம் முஸ்தஃபிசுர் ரஹ்மான்

சூப்பர் ஓவரில் எளிய இலக்கை விரட்டிய ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. ஒரே போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் 'சகலகலா வல்லவனாக' செயல்பட்ட டோனோவன் ஃபெர்ரைராவுக்கு 'ஆட்டநாயகன்' விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஜோகன்னஸ்பர்க் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Credit: Mykhel

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X