விஜய் ஹசாரே தொடரில் 'மரண மாஸ்' காட்டிய சஞ்சு சாம்சன்.. இஷான் கிஷன் எதிரிலேயே சதம் விளாசி அதிரடி
அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட சில மணி நேரங்கள் இருந்த போது, தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடினார். விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில், தனது இடத்துக்கு குறி வைக்கும் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணிக்கு எதிராகவே அவர் சதம் விளாசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே லீக் போட்டியில், ஜார்கண்ட் அணி நிர்ணயித்த 312 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி கேரளா களமிறங்கியது. தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், கேரள அணி கேப்டன் ரோகன் குன்னும்மல் உடன் இணைந்து ஜார்கண்ட் பந்துவீச்சை சிதறடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 212 ரன்களைக் குவித்து வெற்றியை எளிதாக்கியது. ஒருமுனையில் கேப்டன் ரோகன் குன்னும்மல் டி20 பாணியில் வெளுத்து வாங்கினார். வெறும் 78 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 124 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடிய சஞ்சு சாம்சன், அணியின் ஸ்கோரை நிலையாக உயர்த்தினார். 48 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், பின்னர் வேகமெடுத்து 90 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
சஞ்சு சாம்சன் 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து சுபம் குமார் சிங் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ (LBW) ஆனார்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இந்தப் போட்டியில் இஷான் கிஷன் கேப்டனாகச் செயல்பட்ட ஜார்கண்ட் அணிக்கு எதிராகவே சஞ்சு சாம்சன் இந்தச் சதத்தை விளாசியுள்ளார்.
கடைசியாக 2023-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (பார்ல் மைதானத்தில்) சஞ்சு சாம்சன் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு அவர் விளையாடும் முதல் 'லிஸ்ட் ஏ' (List A) போட்டி இதுவாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தனது ஃபார்மை நிரூபிக்கும் வகையில் அவர் சதம் அடித்திருப்பது, "என்னை அணியில் எடுங்கள்" என்று தேர்வுக்குழுவினருக்கு அவர் விடுத்துள்ள மறைமுகச் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ODI டீமில் இடமில்லை.. 3 முக்கிய ஸ்பின்னர்கள் யார்?
எனினும், நியூசிலாந்து ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் என இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். கே எல் ராகுல் ஒருநாள் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications











