டி20 உலககோப்பையில் புது ட்விஸ்ட்.. இது நடந்தால், வங்கதேசம் அணி மீண்டும் விளையாடலாம்.. விவரம்

By Javid Ahamed

மும்பை: 2026 டி20 உலககோப்பையில் ஒரு பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொடரிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தான் விலக முடிவு செய்தால் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழல், இரு நாடுகளின் கிரிக்கெட் தலைவிதியையும் சிக்கலாகப் பிணைத்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மறுத்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வங்கதேசத்தை இத்தொடரிலிருந்து நீக்கும் முடிவை சனிக்கிழமை அன்று அறிவித்தது.


பிப்ரவரி 7-ல் உலகக் கோப்பை துவங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், வங்கதேசம் மீண்டும் இத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்த எதிர்பாராத மாற்றம் பாகிஸ்தானின் முடிவைச் சார்ந்துள்ளது. இந்தியாவில் போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற வங்கதேசக் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருந்தது. அக்கோரிக்கைக்கு பாகிஸ்தான் முன்னதாக ஆதரவளித்திருந்தது.

டி20 உலககோப்பை: பாகிஸ்தான் மீண்டும் குழப்பம்.. பிரதமர் உடன் மோஷின் நக்வி ஆலோசனை.. என்ன நடந்தது?

வங்கதேசத்திற்கு ஆதரவாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பையை புறக்கணிக்கலாமா என தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஒரு வேலை பாகிஸ்தான் இம்முடிவை எடுத்தால், அவர்களுக்கு பதிலாக வங்கதேசத்திற்கு முதலில் வாய்ப்பளிக்கப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி நிர்வாகி, "பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வங்கதேசம் 'ஏ' பிரிவில் அவர்களுக்குப் பதிலாக களமிறங்க வாய்ப்பளிக்கப்படும். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையின்படி, தங்கள் அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடுவர். இந்த ஏற்பாடு மிகக் குறைந்த சவால்களையே ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பயணம் செய்வார்களா என்பது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டதை 'அநீதி' என்று கண்டித்தார். இறுதி முடிவு எடுக்கும் முன் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் கருத்துக்களைக் கேட்பதாக அவர் கூறினார்.

CCL 2026: பாலிவுட்டை பந்தாடிய கோலிவுட்.. விக்ராந்த் 149 ரன்கள் குவிப்பு.. அரையிறுதிக்கு சென்னை தகுதி

நக்வி, வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமைக்குள் தங்கள் முடிவு அறிவிக்கப்படும் என்றார். இவ்வளவு குறுகிய அவகாசம், 'ஏ' பிரிவில் மற்றொரு அணிக்கு இடமளிக்க மிகக் குறைவான நேரத்தையே விட்டுச் செல்லும். இதற்கிடையில், பாகிஸ்தான் ஊடகங்கள், பி.சி.பி. உலகக் கோப்பைக்கு பயணம் செய்வதுடன், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கவும் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளன.

Credit: Mykhel

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X