டெல்லி வீசிய ஆசை வலை.. அமித் ஷா ஜிதான் சொன்னாரு.. விஜயிடம் பேசிய "அதிகாரிகள்".. சூடான பனையூர்!

By Shyamsundar I

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் இருந்து நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான "அழைப்பு" அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரை கூறிக்கொண்டு சில நேரடிப் பிரதிநிதிகள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யிடம் ஒரு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்றுதான் இந்தியத் தேர்தல் ஆணையம் விஜய்யின் கட்சிக்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இந்த உற்சாகத்தில் இருக்கும் தவெக தொண்டர்களுக்கு மத்தியில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) விஜய்யை தன் பக்கம் இழுக்க எவ்வித நிபந்தனையுமற்ற சலுகைகளை அள்ளி வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.


TVK Vijay

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒப்பந்தம்?

டெல்லி உயரதிகாரிகள் விஜய்யிடம் முன்வைத்ததாகக் கூறப்படும் கூடுதல் அம்சங்கள் இவைதான்:

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த உறுதி: "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை யாரும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. நீங்கள் கூட்டணியில் இணையுங்கள், நாம் அனைவரும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம். தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவி மற்றும் பிற முக்கியப் பொறுப்புகள் குறித்து விரிவாகப் பேசிக்கொள்ளலாம்" என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கேட்கும் இடங்கள் மற்றும் தேர்தல் செலவுகள்: தவெக கேட்கும் தொகுதிகளை வழங்கவும், ஒட்டுமொத்த தேர்தல் செலவுகள் மற்றும் அது சார்ந்த இதர விவகாரங்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ளவும் கூட்டணித் தலைமை முன்வந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: தமிழகம் மட்டுமின்றி, விஜய்யின் பரிந்துரையின் பேரில் இதர மாநிலங்களில் இருந்தும் தவெக நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் (Rajya Sabha MP) தேர்ந்தெடுக்கப்பட பா.ஜ.க உதவும் என்ற ஒரு கவர்ச்சிகரமான சலுகையும் இதில் அடக்கம்.

விஜய் முன் இருக்கும் சவால்கள்

தற்போது தவெக தலைவர் விஜய் ஒரு இக்கட்டான சூழலில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், கடந்த செப்டம்பரில் நடந்த கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ (CBI) விஜய்யிடம் தீவிர விசாரணை நடத்தியது. ஒருபுறம் புலனாய்வு அமைப்புகளின் அழுத்தம், மறுபுறம் டெல்லியின் ராஜ மரியாதையுடன் கூடிய அழைப்பு என விஜய் இருமுனைச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

மேலும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்துள்ளதும், டி.டி.வி. தினகரனின் அமமுக கூட்டணியில் இணைந்திருப்பதும் தமிழக அரசியல் சதுரங்கத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

விசில் சத்தமா? தாமரை மலரா?

விஜய் தனது முதல் மாநாட்டிலேயே பா.ஜ.க-வை "கொள்கை எதிரி" என்று அறிவித்திருந்தார். இப்போது டெல்லி தரப்பில் இருந்து வந்திருக்கும் இந்த பிரம்மாண்ட வாய்ப்பு, அவரது முந்தைய நிலைப்பாட்டை மாற்றுமா அல்லது 'விசில்' சின்னம் தனித்து ஒலிக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

விஜய்யின் இந்த முடிவு, தமிழகத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் திராவிட அரசியலின் போக்கையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.

இந்தக் கூட்டணி அமைந்தால், அது ஆளுங்கட்சியான திமுக-வின் தேர்தல் வியூகத்தை எப்படிப் பாதிக்கும் என்ற கேள்வி உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு கூட விஜயை கூல் செய்ய டெல்லி மேற்கொள்ளும் மூவ் என்றுதான் கூறுகிறார்கள்.

Credit: Oneindia

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X