பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு

By Pavithra Mani

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


old pension scheme cm stalin government employees

வேலை நிறுத்தப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளன.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து, இந்த கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுடன் டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இறுதி அறிக்கை

இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான மூவா் குழு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்த சங்கப் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்து அமைச்சா்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஓய்வூதிய விவகாரம் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ககன்தீப் சிங்குடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வரின் முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்று அமைச்சா்கள் தெரிவித்தனா். 23 ஆண்டுகால பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வரின் அறிவிப்புக்குப் பின்னர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

Credit: Oneindia

More from Filmibeat

Read more about: notification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X