OTT Gem: Eko Review: நன்றிக் கெட்ட மகனை விட நாய்கள் மேலடா.. எக்கோ விமர்சனம்.. வொர்த் வர்மா!

சென்னை: நெட்பிளிக்ஸில் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ரசிகர்களை சோதித்து அந்த ஓடிடி நிறுவனத்துக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், சில நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் உலகளவில் ரசிகர்களை நெட்பிளிக்ஸ் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. சமீபத்தில், வெளியான ஹோம்பவுண்ட் தமிழ் டப்பிங் இல்லை என்றாலும், இந்தியில் பார்த்தாலே புரியும்படியும் கண்கலங்க வைக்கும்படியும் இருந்த நிலையில், மலையாள திரைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலையாளத் திரைப்படங்கள் என்றாலே தரமான த்ரில்லர் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே வரிசையில், ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய 'கிஷ்கிந்தா காண்டம்' படக்குழுவினர் தற்போது 'எக்கோ' (Eko) எனும் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்துடன் களமிறங்கியுள்ளனர். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

OTT Gem Eko Review in Tamil A worthwatching suspense thriller
Photo Credit:

இந்த பொங்கலுக்கு தியேட்டருக்கு எல்லாம் சென்று செலவு செய்ய முடியவில்லை என நினைக்கும் ரசிகர்கள் வீட்டில் ஒட்டுமொத்த குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்தாலும், போர் அடிக்காமல் அதே சமயம் டைம் வேஸ்ட் என நினைக்காத அளவுக்கு ஒரு ஒர்த்தான ஓடிடி ஜெம் தான் இந்த Eko.

Eko கதை: இப்படத்தின் கதைக்களம், கேரள-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த பனிமூட்டமான 'காட்டுக்குன்னு' எனும் மலைப்பகுதியைச் சூழ்ந்துள்ளது. அங்கு, 'மலாத்தி' (சோயி) என்ற வயது முதிர்ந்த பெண், தனது காவலாளி 'பியூஸ்' (சந்தீப் பிரதீப்) மற்றும் ஒரு பெரிய வேட்டை நாய்க் கூட்டத்துடன் தனிமையில் வசித்து வருகிறார்.

சமூகத்தில் இருந்து விலகி வாழும் இவருக்கும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள மர்மமான நாய் வளர்ப்பாளர் 'குரியச்சன்' என்பவருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இவர்களைத் தேடிவரும் போலீஸ் அதிகாரியான நரேன் மூலம் வெளிப்படும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் யாவை? இவையே 'எக்கோ' திரைப்படத்தின் விறுவிறுப்பான கதைக்கருவாகும்.

OTT Gem Eko Review in Tamil A worthwatching suspense thriller
Photo Credit:

படம் எப்படி இருக்கு?: "நன்றிக்கெட்ட மகனை விட நாய்கள் மேலடா" என்கிற சிவாஜியின் பாடல் தான் இந்த படத்தை பார்த்தால் நினைவுக்கு சட்டென வருகிறது. திரைப்படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று, நாய்களின் சித்தரிப்பு. இவை வெறும் விலங்குகளைப் போல இல்லாமல், கதையின் முக்கிய கதாபாத்திரங்களாகவே பரிணமிக்கின்றன. அவற்றின் துல்லியமான, ஆக்ரோஷமான காட்சிகள் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்காரவைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

திரைக்கதை மற்றும் இயக்கம் படத்திற்குப் பெரிய பலம் சேர்க்கின்றன. 'கிஷ்கிந்தா காண்டம்' புகழ் பாஹுல் ரமேஷின் எழுத்தாக்கம், டின்ஜித் அய்யத்தனின் திறமையான இயக்கத்துடன் இணைந்து, 'எக்கோ' திரைப்படத்தை ஒரு சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது. மெதுவாக நகரும் ஆரம்பம், இரண்டாம் பாதியில் எதிர்பாராத வேகத்தையும் திருப்பங்களையும் சந்திக்கிறது.

நடிப்புத் திறனில் சந்தீப் பிரதீப் அமைதியான இளைஞனாகத் தோன்றி, அதே நேரத்தில் ஆக்ரோஷமான காட்சிகளிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார். 'காதல் தேசம்' புகழ் வினீத் மற்றும் நரேன் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தி, கதைக்கு வலு சேர்க்கின்றனர்.

முஜீப் மஜீத்தின் பின்னணி இசை, ஜி.வி. பிரகாஷ் பாணியில் ஒவ்வொரு காட்சியின் உணர்வையும் மேலும் மெருகேற்றுகிறது. ஒளிப்பதிவு, காட்டுக்குன்னு மலைப்பகுதியின் அபாயகரமான அழகை அழகாகப் படம்பிடித்துள்ளது. வசனங்கள் இல்லாமலேயே அந்நிலப்பரப்பை ரசிக்கும்படி கதை அமைந்துள்ளது.

திரைப்படத்தில் நிறைந்திருக்கும் திருப்பங்கள், பார்வையாளர்களைக் இறுதிவரை யூகிக்க முடியாதபடி வைக்கின்றன. யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற பாத்திரங்களின் தன்மை கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

பார்க்கலாமா? வேண்டாமா?: 'எக்கோ' ஒரு 'ஸ்லோ-பர்ன்' வகைத் திரைப்படம் என்பதால், அதன் ஆரம்ப காட்சிகளில் சற்றுப் பொறுமை தேவைப்படலாம். அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பார்வையாளர்களுக்கு இது சற்றே ஏமாற்றம் தரக்கூடும்.

'ஆரண்ய காண்டம்' பாணியில், கிளைமாக்ஸின் முடிவை பார்வையாளர்களின் யூகத்திற்கே இயக்குநர் விட்டுள்ளார். இதனால், சிலருக்கு அதன் அர்த்தம் உடனடியாகப் புலப்படாமல் போகலாம். இறுதி ஐந்து நிமிடக் காட்சியை ஒருமுறைக்கு இருமுறை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஆனாலும், இதுவே ஒரு கலை அம்சம் என்று கூறலாம்.

ஒரே ஒரு சின்ன பொய் என்று குரியச்சன் சொல்லும் இடத்தில் அந்த பாட்டி பேசும் வசனம், நாய்களையும் பெண்களையும் அடைத்து வைப்பது தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கிலேயே இந்த படம் கிடைக்கிறது. மிஸ் பண்ணாம பார்த்துடுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X