OTT: ஆபாச படங்களை வெளியிட்ட 18 ஓடிடி ஆப்களுக்கு ஆப்பு.. மத்திய அரசு அதிரடி.. 19 வெப்சைட்கள் சிக்கின!

டெல்லி: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கு இளைஞர்கள் கைகளிலேயே இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் ஓடிடிக்கள் மற்றும் ஆபாச வெப்சைட்களை பார்ப்பது தான் காரணம் என ஏகப்பட்ட புகார்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்த நிலையில், ஏற்கனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அதிரடியாக ஆபாச ஓடிடி தளங்கள் மற்றும் வெப்சைட்டுகள் மற்றும் சில ஆப்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

18 OTT apps and 19 adult websites banned today in India

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடந்த மார்ச் 12ம் தேதி இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச காட்சிகள், வெறுப்புணர்வை தூண்டும் விதமான படங்களை வெளியிட்ட ஓடிடி நிறுவனங்கள், வெப்சைட்கள் மற்றும் சோஷியல் மீடியா ஐடிக்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

18 ஓடிடி: ஆபாச படங்களை மட்டுமே வெளியிட்டு காசு பார்த்து வந்த 18 ஓடிடி ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், ஒரு ஓடிடி செயலியை சுமார் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சந்தாதாரர்களாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த எந்த ஓடிடி நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வரும் என தெரிகிறது.

19 வெப்சைட்கள்: மேலும், Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X , VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, Prime Play உள்ளிட்ட 19 வெப்சைட்களையும் அதிரடியாக தடை செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளனர்.

57 சோஷியல் மீடியா கணக்குகள்: மேலும், ஓடிடி நிறுவனங்களுக்கு தொடர்புள்ள 57 சோஷியல் மீடியா கணக்குகளையும் நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆபாச காட்சிகளுக்கு எதிரான பிரிவுகளின் அடிப்படையில் இத்தனை ஓடிடிக்கள் மற்றும் வெப்சைட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் அதிகளவிலான நிர்வாணக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள், பெண்களை துன்புறுத்தும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் போன்றவை எடுக்கப்பட்டால் அதற்கு அனுமதி மறுப்பதோடு கடும் நடவடிக்கைகளும் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X