OTT: 2025ல் கொரிய வெப்சீரிஸ்கள் களைகட்டப்போகுது.. ஸ்குவிட் கேம் 3வது சீசனும் வருதா? லிஸ்ட் பெருசு!

சென்னை: தென் கொரியாவில் உருவாக்கப்படும் வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களுக்கு உலகளவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றன. 2016ம் ஆண்டு கங்னம் ஸ்டைல் பாடல் உலகளவில் ஹிட் அடித்த நிலையில், அத்தனை கண்களும் கே பாப் மற்றும் கே டிராமா பக்கம் அப்படியே திரும்பின. அதிலும், இந்த ஸ்குவிட் கேம் நெட்பிளிக்ஸில் வெளியாகி கொரிய வெப்சீரிஸ்களை மக்கள் மத்தியில் வேறலெவலுக்கு கொண்டு சென்று விட்டது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகளை கொட்டி புதிய புதிய கொரிய வெப்தொடர்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நெட்பிளிக்ஸில் கே டிராமா என தனியாக ஒரு செக்‌ஷனே அதற்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

k drama squid game 3

வரும் டிசம்பர் 26ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை டார்கெட் செய்து ஸ்குவிட் கேம் வெப்சீரிஸின் 2வது சீசன் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு 3வது சீசனும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு கொரிய ஆண்டாகவே ஓடிடி ரசிகர்களுக்கு மாறப்போவதாகவும் பல சூப்பர் ஹிட் வெப்சீரிஸ்கள் அணிவகுத்து காத்திருக்கும் நிலையில், அவற்றை பற்றிய சிறு அலசலை இங்கே காணலாம்.

ஸ்குவிட் கேம் 3: பாரசைட் திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளை குவித்து கொரிய படங்கள் மீதான ஈர்ப்பை கொண்டு வந்து சேர்த்தது. நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்குவிட் கேம் வெப்சீரிஸை பார்த்துவிட்டு இப்படியெல்லாம் பணத்துக்காக கேம் வைத்து கொலை செய்வார்களா என ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஸ்குவிட் கேம் இந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. டிஸ்னி நிறுவனம் மற்ற ஓடிடி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து ஏகப்பட்ட வெப்சீரிஸ்களை இறக்கப் போகின்றதாம். வரும் 2025ம் ஆண்டு சம்மருக்கு ஸ்குவிட் கேம் 3 வெளியாகும் என்றும் அதுதான் கடைசி சீசன் என்றும் கூறுகின்றனர்.

k drama squid game 3

ஏகப்பட்ட கே டிராமா ஆன் தி வே: மேலும், வரும் 2025ம் ஆண்டு கே டிராமா ஆண்டாக மாறப்போகிறது என்றும் கூறுகின்றனர். When the Stars Gossip, All the Love You Wish For, தி முர்க்கி ஸ்ட்ரீம், லைட் ஷாப், அன் மாஸ்க்ட், நாக் ஆஃப், நைன் பஸல்ஸ், ஹைபர் நைஃப், லோ லைஃப், டெம்பஸ்ட், தி மேனிபுலேட்டட், மேட் இன் கொரியா உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் அடுத்த ஆண்டு லைன் கட்டி ரிலீஸ் ஆகப்போகின்றன. டிஸ்னி பிளஸ் பல வெப்சீரிஸ்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

k drama squid game 3

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X