ஓடிடி பியூட்டி.. வெப்சீரிஸ்களில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் டாப் 5 தமிழ் நடிகைகள்!

சென்னை: சென்சார் இல்லாத காரணத்தால் ஓடிடி வெப்சீரிஸ்களில் நடிகைகள் மேலாடை கூட இல்லாமல் படு தாராளமாக நடித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக சமீப காலமாக வெப்சீரிஸ் நடிகைகளை இணையத்தில் அதிக ரசிகர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமிலும் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களையும், ரீல்ஸ்களையும் இவர்கள் போட்டு வரும் நிலையில், அனைவரது கவனமும் இவர்கள் பக்கமே திரும்பி உள்ளது. அப்படி இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஏங்க வைத்த டாப் 5 ஹாட் வெப்சீரிஸ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

அதிதி போஹன்கர்

அதிதி போஹன்கர்

2014ல் மராத்தி மொழியில் வெளியான லாய் பஹாரி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அதிதி போஹன்கர் (Aaditi Pohankar). தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் 2020 முதல் 2022 வரை நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பாகி வரும் செம ஹாட் வெப்சீரிஸான ஷீ (She) வெப்சீரிஸில் பூமிகா பரதேசி எனும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சாதாரண கான்ஸ்டபிள் அண்டர்கவர் ஆப்பரேஷனுக்காக பிராஸ்ட்யூட்டாக மாறும் ரோலில் ஒட்டுமொத்த ஆடையையும் களைந்து படு போல்டாக நடித்துள்ளார். ஆஷ்ரம் வெப்சீரிஸிலும் அதிதியின் நடிப்பு வேறலெவல்.

இஷா தல்வார்

இஷா தல்வார்

தட்டத்தின் மரியத்து எனும் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இஷா தல்வார். தமிழில் தில்லு முல்லு, மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், பெங்களூர் டேஸ் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருப்பார். மிர்ஸாபூர் வெப்சீரிஸில் நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்சீரிஸிலும் இவர் நடித்துள்ளார்.

நம்ம வானதி

நம்ம வானதி

ராமன் ராகவ் எனும் இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நம்ம பொன்னியின் செல்வன் வானதி நடிகை சோபிதா துலிபாலாவும் வெப்சிரீஸில் செம ஹாட்டாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 2019ல் வெளியான மேட் இன் ஹெவன், பார்ட் ஆஃப் பிளட் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும். தி நைட் மேனேஜர் வெப்சீரிஸ் ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வரும் நிலையில், அந்த வெப் தொடரிலும் சோபிதா துலிபாலா தான் செம ஹாட்டாக நடித்து வருகிறாராம்.

வாமிகா

வாமிகா

மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த வாமிகா காபி, இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கிரஹன், மாய், மாடர்ன் லவ் மும்பை உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்து அசத்தி உள்ளார். பாகுபலி பிஃபோர் தி பிகினிங் வெப்சீரிஸிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என அனைத்து டாப் ஓடிடி தளங்களிலும் இவர் கலக்கி வருகிறார்.

 ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே இந்தி வெப்சீரிஸ்களில் படு ஹாட்டாக நடித்து வருகிறார். சேக்ரட் கேம்ஸ், கவுல், ஓகே கம்ப்யூட்டர் என இவர் நடிப்பில் பல பெரிய வெப்தொடர்கள் வெளியாகி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளன. சாந்தாராம் எனும் வெப்சீரிஸ் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X