13 வயதில் ஒரு கொலை.. பெற்றோர்களே கவனமா இந்த சீரிஸ் பாருங்க.. பரபரப்பான அடலசன்ஸ் தொடர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்றைய சூழலில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பது குறித்த பாடங்களே படங்களாக அதிகம் வந்துகொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் டீன் ஏஜ் பருவ பையனும், பெண்ணும் செய்யும் அட்ராசிட்டி ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு 13 வயது பையனை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை சொல்லும் வெப் தொடர்தான் அடலசன்ஸ். 13 வயது பிள்ளைகளை பெற்றோர்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 13 சிறுவன் கொலை குற்றவாளியாக கைது செய்யப்படுகிறான். அதனால் பெற்றோர் அடையும் மனை உளைச்சல்கள் என நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் அடோலோசென்ஸ் (Adoloscence). நான்கே நான்கு எபிசோட்கள் கொண்ட மினி சீரிசாக வந்திருக்கும் இது எழுப்பியிருக்கும் கேள்விகள் தலையை சுற்ற வைக்கின்றன. அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு 13 வயது சிறுவன் ஜேமியை (ஓவன் கூப்பர்) தன்னுடன் படிக்கும் மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்கிறது. ப்ளம்பிங் வேலை செய்து வரும் அவனது தந்தைக்கு (ஸ்டீபென் கிரகாம்) ஒன்றும் புரியவில்லை. அவனுக்குத் தேவையான சட்ட உதவியும், சைக்கலாஜிஸ்ட் ஒருவரையும் ஏற்பாடு செய்து தருகிறது. உண்மையில் அந்தச் சிறுவன் கொலை செய்தானா. நடந்தது என்ன. இந்தக்குடும்பத்திற்கு இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.

பகுதி 2: நான்கு எபிசோடுகள் தான் ஒரு மணிநேரம் வரை ஓடக்கூடியவை. குறைந்த பட்சக் கேரக்டர்கள். மிக மெதுவாக நகரும் காட்சிகள் ஆனால் நம்மைக் கட்டிப் போடுவது மேக்கிங்கில் மேஜிக் செய்துள்ளனர். சிங்கிள் ஷாட்டில் அசுரத்தனமான உழைப்பும், திட்டமிடலும் ரிகர்சல்களும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. சிங்கிள் ஷாட்கள் என்றே நமக்குச் சில நிமிடங்களில் மறந்து விடுகிறது. அந்த அளவு பிரம்மாதப்படுத்தியுள்ளனர். 2ஆவது எபிசோடில் பள்ளியில் நடக்கும் காட்சிகளை நகர்த்திய விதம் அற்புதமாக இருந்து. அத்தனை மாணவர்கள், ஸ்டேடியம், வகுப்பறை, சாலை வழியாக புகுந்து செல்லும் கேமிரா சிறுவன் தப்பியோட முயற்சிக்கும்போது அவனை பின்தொடர்ந்து செல்லும் போலீஸ் என ஒவ்வான்றும் பிரம்மிப்பை தருகின்றன. கடுகு சிறிதானாலும் காரம் குறையாது போல என்பதை்தான் அடோலோசென்ஸ் உணர்த்தியிருக்கிறது.
பகுதி 3: பெண்களின் உடல் பாகங்களை டீன் ஏஜ் பருவத்தினர் பார்க்கும், விவரிக்கும் விவரங்கள் நிறைந்த உரையாடல்கள் வயது வந்தவர்களுக்கே ஆனதாக இருந்தாலும் மிக அவசியமானது. முகத்தின் மிக அருகே வந்து கர்ர்ரென்று அவன் உறுமும்பொழுது அதிர்வது அந்த மருத்துவர் மட்டுமல்ல. நான்கில் இது முக்கியத்துவமும் சுவாரசியமும் நிறைந்த ஒரு பகுதியாக 3வது எபிசோடு இருக்கிறது. இரண்டு நபர்கள் மட்டுமே பங்கு பெரும் இந்த எபிசோடில் ஜேமி என்ற சிறுவனும், மிஷா என்ற சைக்காலஜிஸ்டும் மட்டுமே. சிரிப்பு, அழுகை, கோபம், ரௌத்திரம், வெறியென மாறிமாறித் தனது உடல்மொழியில் வெளிப்படுத்தி ஐயோடா என்று சொல்ல வைத்துவிடுகிறான் அந்தச் சிறுவன். அனைத்தும் முடிந்த பின் அந்த மருத்துவர் உடைந்து அழும் காட்சிகளை பார்க்கும் போது அவரும் மனிதர் தான் உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா என்றே கேட்க தாேன்றும்.

பகுதி 4: தனது மகனை சரியாக வளர்க்கவில்லையோ என்று அந்தச் சிறுவனின் தந்தை குற்றவுணர்ச்சி அடைந்து புலம்பும் காட்சிகளில் வசனமும், அவருடைய நடிப்பும் காண்போரை கலங்க வைத்து விடும். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பதின் பருவ சிறுவர்களின் மனதில் எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பதைப் பற்றி ஆழமாக, நுட்பமாக, உளவியலாக பேசும் வகையில் இந்த இணையத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களால் மறுபடி ஒரு இயல்பான வாழ்க்கையை எதிர்கொள்ள முடியுமா எனப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. தந்தையாக வரும் ஸ்டீவன் கிரஹாம் இதை இணைந்து எழுதி உருவாக்கியுள்ளார் என்பது கதையின் ஆழத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
இவரது மனைவியாக வரும் கிறிஸ்டின் யதார்த்தம். தனது கணவரின் கோபத்தைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பது. நான் உங்களிடம் சரியாக அன்பு காட்டத் தவறிவிட்டேனா என்று புலம்பும் அவருக்கு ஆறுதல் சொல்வது. மகளைச் சரியானபடி வழிநடத்த வேண்டுமே என்று பதறும் காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவைக்கின்றன. இன்ஸ்டா உலகில் அம்மாவுக்கு நீங்க போடற ஹார்ட் சிம்பல் என்ன கலர்ல இருக்கும். சிவப்பா. அப்ப அது காதல். மஞ்சள்ன்னா ஒரு மீனிங், நீலம்னா ஒரு மீனிங் இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதுல்ல. அது தான் இன்ஸ்டா மொழி. அதைத் தெரிஞ்சுக்காம ஸ்கூல்ல பசங்ககிட்ட விசாரணை பண்றப்ப முட்டாளா நிக்காதீங்க என்று சிறு வயது பையன் பெற்றோருக்கு தரும் அட்வைஸாகவும் மாறிவிடுகிறது.

மகன் செய்யும் தவறுகளுக்கு பெற்றோரும் காரணமாக இருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளும் முடிந்த பின்னர், தனது மகனிடம் வந்து என்னை மன்னித்து விடு. உனக்கு இன்னும் நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும் என்று மகனின் படுக்கையில் முகம் புதைத்து அழும்போது ஆகப்பெரும் தந்தகள் போற்றும் மனிதராக மாறிவிட்டார். இப்படியொரு கதையை எடுத்ததற்காக இயக்குநர் Philip Barantini பாராட்டியே ஆக வேண்டும். பிள்ளைகள் கேட்கிறார்கள் என அவர்கள் விரும்பும் அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொடுப்பதோடு பெற்றவர்களின் பொறுப்பு முடிவதில்லை. அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அவர்களுடன் சரியான அளவு சரியான நேரம் செலவழிப்பதும் எத்தனை அவசியமானது. இதை மிகத்தெளிவாகச் கூறியுள்ள அடலசன்ஸ் பெற்றோர்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையினரும் தவறாமல் பார்க்க கூடி ஒரு வெப்சீரிஸ் தான்.

பிரபலங்கள் பாராட்டு: 4 மணி நேரம் செலவழிக்க தயங்க வேண்டாம். இதை பார்த்த பின்பு அக்கறையோ அல்லது பொறுப்புணர்வு வருவது சகஜம் தான். கவனமாக கையாள வேண்டிய பங்கு நம்மிடம் இருக்கிறது. ஒரு பிரச்சினைக்கு உள்ளானவர்களை விட அந்தப் பிரச்னைக்குக் காரணமானவர்களைக் கொண்டாடும் இந்த மனப்போக்கு மிக கொடுமையானது.இந்தியாவில் இந்த தொடர் தற்போது டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட், அனுராக் காஷ்யப், அட நம்ம கயாடு லோஹர் முதற்கொண்டு இந்த வெப் தொடரை வரவேற்று ஸ்டோரி வைத்துள்ளனர். பிறருக்கும் இந்த தொடரை பார்க்க வேண்டும் என ரெபரன்ஸ் தருகின்றனர். இந்திய அளவில் அடலசன்ஸ் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











