A THURSDAY: ஒரு பெண்ணின் கோவம் என்ன செய்யும் தெரியுமா? ஓடிடியில் பார்க்க வேண்டிய படம்!

சென்னை: கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் தான் A THURSDAY. பல விதமான ட்விஸ்டுகளுடன் வெளியான இத்திரைப்படத்தில் யாமினி குப்தா, டிம்பிள் கபாடியா, நேஹா துபியா, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழக்கமாக பெண்களை கதாநாயகியாக ஒப்புக்கு வைத்து அழகு பார்க்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் கதாநாயகியின் தோளில் மொத்த கதையையும் வைத்து அழகு பார்த்து இருக்கிறார் இயக்குநர் பெஹ்சாத் கம்பட்டா.

கதையின் நாயகியான யாமினி குப்தா(நெய்னா ஜெஸ்வால்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தனது வருங்கால காதலனுடன் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் அதே வீட்டின் ஒரு பகுதியில் நர்சரி பள்ளியை நடத்தி வருகிறார். 16 குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளிக்கு வருவதற்கு, குழந்தைகள் மிகவும் ஆசையாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் நெய்னா குழந்தைகளிடம் விளையாடுவது, பாட்டுப்பாடுவதுமாக இருப்பதால் குழந்தைகளுக்கு நெய்னாவை ரொம்ப பிடித்து விடுகிறது.

A Thursday movie you must watch on ott platform

A THURSDAY: இந்த நேரத்தில் தான் வியாழக்கிழமையான ஒரு நாள், பள்ளிக்கு குழந்தைகள் அனைவரும் வந்தவுடன் விபரீதமான முடிவு ஒன்றை எடுக்கிறாள் நெய்னா. அதாவது தனது பள்ளியில் படிக்கும் அனைத்து பெற்றோருக்கும் உங்கள் குழந்தையை கடத்தி பிணைக்கைதியாக வைத்து இருக்கிறேன். இதுபற்றி என்னுடன் பேச போலீஸ் அதிகாரியான அதுல் குல்கர்னி தான் வேண்டும் என்று கேட்க ஒட்டுமொத்த மீடியாவும் அந்த இடத்தில் குவிகிறது. அப்போது, போலீஸ் அதிகாரி நெய்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஒரு குழந்தையை வெளியில் விடவேண்டும் என்றால் 5 லட்சம் வேண்டும் என்று பேசுகிறார். நெய்னாவின் டிமாண்டால் கடுப்பான பெண் போலீஸ் அதிகாரி நேஹா குப்தா, இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அதிரடியாக பள்ளிக்குள் நுழைய, டென்ஷனான நெய்னா ஒரு குழந்தையை கொன்றுவிடுகிறாள்.

A Thursday movie you must watch on ott platform

மன நலம் பாதிக்கப்பட்டவள்: இதனால், நாடே பரபரப்பாக நெய்னா, வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், இந்த நாட்டின் பிரதமருடன் பேச நான் என்று கோரிக்கை வைக்கிறாள். அது மீடியாக்களிலும் தலைப்புச் செய்தியாகி நாடே பரபரப்பாகிறது. இந்த நேரத்தில் நெய்னா ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவள் என்பதும், அவர் 16 வயதில் இருந்தே, அதற்காக மருத்து எடுத்துக்கொண்டு வருவதும், நெய்னாவின் அம்மா மூலமாக போலீசுக்கு தெரியவருகிறது.

வாழ்க்கையில் நடந்தது என்ன: இதையடுத்து நெய்னாவின் வாழ்க்கையில் நடந்த அந்த மோசமான சம்பவம் குறித்து நெய்னாவின் அம்மா சொல்ல, அதுல் குல்கர்னி அதிர்ந்து போகிறார். அப்படி நெய்னா வாழ்க்கையில் நடந்தது என்ன? அதுல் குல்கர்னியுடன் பேச வேண்டும் என நெய்னா சொல்ல என்ன காரணம்? 16 குழந்தைகளை பிணை கைதியாக வைத்திருந்தது ஏன்? என இதுபோன்ற பலவிதமான திருப்பங்களுடன் A THURSDAY என்ற திரைப்படத்தின் கதை நகர்கிறது. கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். த்ரில்லர் ஜனரை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X