வலி நிறைந்த கதையை அனுபவிக்க தயாரா?.. ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தேதி.. வெளியானது அறிவிப்பு
சென்னை: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த திரைப்படம் ஆடுஜீவிதம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மார்ச் மாதம் படம் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோருக்கு பிடிக்கவே செய்திருந்தது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் போதிய ரெஸ்பான்ஸே கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தச் சூழலில் ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார். தமிழில் அவர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானார். அவரது நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படமானது பென்யாமின் எழுதிய The Goat's Life என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்ற இளைஞன் சவுதிக்கு வேலை சென்ற சூழலில் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழில் கிடைக்க; அப்போது ஏற்பட்ட பிரச்னையால் சிறைக்கு சென்று அங்கிருந்து எப்படி வெளியே வந்தார் என்ற லைனை வைத்துக்கொண்டு சுவாரசியம் குறையாமல் நாவல் செல்லும்.
பிளெஸ்ஸி இயக்கம்: The Goat's Life நாவலை படமாக்க இயக்குநர் பிளெஸ்ஸி 2010ஆம் ஆண்டே முயன்றார். அதற்கு பிருத்விராஜும் துணை நின்றார். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. அதேசமயம் இந்த நாவலை படமாக்கினால் பிருத்விராஜைத்தான் ஹீரோவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிளெஸ்ஸி சில வருடங்களுக்கு முன்பு படத்தின் பணிகளை தொடங்கினார். பல கஷ்டங்களை தாண்டி நாவலை படமாக்கி முடித்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படம் ரிலீஸ்: படமானது கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே நாவலுக்கு பரவலான வரவேற்பு இருந்தது. அதனை படித்தவர்கள் படமாக பார்க்க ஆர்வமாக இருந்தார்கள். அந்த ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே படத்துக்கு கொடுத்தார்கள். அதேசமயம் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் ஆடுஜீவிதம் படம் மே மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸாகவில்லை. சூழல் இப்படி இருக்க ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 19ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படமானது ஸ்ட்ரீமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











