நெஞ்சை உறைய வைத்த பிருத்விராஜ் நடிப்பு! ஆடுஜீவிதம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடுஜீவிதம். இந்த படம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது. இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படம் உண்மைச் சம்வத்தை மையப்படுத்தி மலையாளத்தில் எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்த படம் மலையாளத்தில் தி கோட் லைஃப் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கு ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படம் 2008 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான மலையாள நாவலான பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதத்தின் தழுவலாகும், இது கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

கொரோனா கால இடையூறு என பல இடையூறுகளுக்கு மத்தியில் இந்த படம் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட சுமார் ரூபாய் 82 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூபாய் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. மக்கள மத்தியில் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு இருந்தது. தமிழில் இந்த படத்தைப் பார்த்த பலருக்கு கொஞ்சம் மரியான் சாயல் இருப்பதாக கூறியிருந்தாலும், இரண்டு படங்களின் கதைக்களம் வேறு. இதனால் படம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போகவே படம் குறித்து சமூக வலைதளங்களில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிரத் தொடங்கினர்.

ரிலீஸ் தேதி: படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் பலரும் எப்போது ஆடு ஜீவிதம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், படக்குழு தரப்பில் இருந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து கடந்த சில மாதங்களாக அதாவது படம் தியேட்டரில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஓடிடி ரிலீஸ்: இந்த நிலையில், சமீபத்தில் ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆடு ஜீவிதம் படம் ஜூலை 19-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆடு ஜீவிதம் படம் இன்று நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.

மற்ற படங்கள்: அதேபோல் இன்று முதல், இயக்குநர் எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம் அஞ்சாமை. இந்த படமும் இன்று முதல் சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகின்றது. அதேபோல், இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ரயில். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் வெடியப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் ஜே ஜனனி இசையமைத்துள்ளார். இந்தப் படம் டென்டு கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகின்றது. இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடிப்பில் வெளியான காடுவெட்டி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











