OTT Release movies: இன்று ஓடிடியில் வெளியான படங்கள்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?

சென்னை: கடந்த வாரம் தியேட்டரில் இந்தியன் 2 திரைப்படமும், பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படமும் வெளியானது. அதைத் தொடர்ந்து போன வாரம் பெரிதாக எந்த படமும் வெளியாகாத நிலையில், ஓடிடியில் இந்த வாரம் பல புது படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படங்களை வீட்டில் ஜாலியாக அமர்ந்து கொண்டு குடும்பத்தோடு பார்க்கலாம்.

ஆடுஜீவிதம்: மார்ச் மாத இறுதியில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று 19ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. பிரபல மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இப்படத்தை இயக்கிய நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருந்தார். 82 கோடிகள் பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு பூர்த்தி செய்யவில்லை என ஒரு தரப்பினரும், மற்றொருதரப்பினர் நடிகர் பிருத்விராஜூக்கு தேசிய விருது தர வேண்டும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

OTT Netflix disney plus hot star

அகாலி: நாசர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார் ஜானகிராமன், வினோத் கிஷன் மற்றும் நடிகை ஸ்வயம் சித்தா ஆகியோர் நடித்துள்ள அகாலி தமிழ் மொழி டார்க் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் மே 31ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிஜிட்டல் பிரீமியரில் வெளியான இப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

OTT Netflix disney plus hot star

அஞ்சாமை: வித்தார்த் நடிப்பில் வெளிவந்த அஞ்சாமை மற்றும் லாந்தர் படம் சிம்ப்ளி சவுத் எனும் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. நீட் தேர்வையும், அதன் பாதிப்புகளையும், கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கத்தையும் இத்திரைப்படம் அழுத்தமாக கூறியுள்ளது. திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

காடுவெட்டி: பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான திரைப்படம் காடுவெட்டி. இந்த படம் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.

OTT Netflix disney plus hot star

Nagendran's Honeymoons: நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் ஒரு புதிய காதல் மலையாள நகைச்சுவைத் வெப் தொடராகும். இதில் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வளைகுடாவுக்குச் செல்ல வேண்டும் என்று கனவு காணும் சோம்பேறியான நாகேந்திரனைச் சுற்றி இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

OTT Netflix disney plus hot star

கனவுக்கு நிதியுதவி தேவைப்படுவதால், அவர் திருமணம் செய்து கொண்டு அதில் வரும் வரதட்சணை பணத்தை வைத்து வளைகுடாவிற்கு செல்ல திட்டம் போடுகிறார். இத்தொடரை Disney+Hotstarல் பார்த்து மகிழாலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X