twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீர் கான் சொன்னதுக்கு முன்பாகவே ஓடிடியில் வெளியான லால் சிங் சந்தா… ஏன் இந்த திடீர் மாற்றம்?

    |

    மும்பை: இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    லால் சிங் படத்துக்கு எதிராகவும், அமீர் கானுக்கு எதிராகவும் நெட்டிசன்கள் பாய்காட் செய்ததால் இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், லால் சிங் சந்தா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அமீர் கான் பேசியது இப்போது பொய்யாகியுள்ளது.

    பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் கவரவில்லை.. இந்தி வசூல் இவ்ளோ தான்.. ப்ளு சட்டை மாறன் ட்வீட்! பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் கவரவில்லை.. இந்தி வசூல் இவ்ளோ தான்.. ப்ளு சட்டை மாறன் ட்வீட்!

    எதிர்பார்ப்புடன் வெளியான லால் சிங் சந்தா

    எதிர்பார்ப்புடன் வெளியான லால் சிங் சந்தா

    இந்தியில் பல தரமான படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் அமீர்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி 'லால் சிங் சத்தா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படம், ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவானது, கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

    அமீர்கானுக்கு எதிராக நெட்டிசன்கள் பாய்காட்

    அமீர்கானுக்கு எதிராக நெட்டிசன்கள் பாய்காட்

    இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியான 'லால் சிங் சத்தா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அமீர்கான் ரொம்பவே பிஸியாக இருந்தார். அப்போது கிடைத்த வரவேற்பால், லால் சிங் சந்தா படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தனமைக் குறித்து அமீர்கான் பேசியிருந்ததை குறிப்பிட்ட நெட்டிசன்கள், 'லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால், தொடர்ந்து அவருக்கு எதிரான பாய்காட் போஸ்ட்கள் வைரலாகின.

    பாக்ஸ் ஆபிஸில் மரண அடி

    பாக்ஸ் ஆபிஸில் மரண அடி

    மேலும், 'லால் சிங் சத்தா' படத்தில் இந்திய ராணுவம், இந்து மதம் நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளதாக அமீர் கான் மீது, டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய 'லால் சிங் சத்தா' படம், வசூலில் ரொம்பவே தடுமாறியது. அதுமட்டும் இல்லாமல் திரையரங்குகளில் 'லால் சிங் சத்தா' படத்தின் காட்சிகளும் குறைக்கப்பட்டன. இறுதியாக லால் சிங் சந்தா படம் மொத்தமே 59 கோடிகள் மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. இதனால், தனது சம்பளத்தை அமீர்கான் தள்ளுபடி செய்ததாகவும் சொல்லப்பட்டது.

    ஓடிடியில் வெளியான லால் சிங் சந்தா.

    ஓடிடியில் வெளியான லால் சிங் சந்தா.

    இந்நிலையில், லால் சிங் சந்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய அமீர் கான், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஆறு மாதங்களுக்கு பிறகே ஓடிடியில் ஒளிப்பரப்பாக வேண்டும், லால் சிங் சந்தாவும் அப்படியே ரிலீஸாகும் என்றார். ஆனால், லால் சிங் சந்தா படம் வெளியான 55 நாட்களிலேயே இப்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததால், அமீர் கான் மனம் மாறிவிட்டாரா என கேள்விகள் எழுந்துள்ளன. இன்னொரு தரப்பினர் திரையரங்குகளில் பாய்காட் செய்யப்பட்ட லால் சிங் சந்தா, ஓடிடி ரசிகர்களிடமாவது வரவேற்பை பெறட்டுமே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

    English summary
    Bollywood Super Star Aamir Khan reportedly stated that he will release ‘Laal Singh Chaddha’ on OTT platforms six months after its theatrical release. He seems to have gone back on his words as ‘Laal Singh Chaddha’ has already been released on Netflix 55 days after its theatrical release. The film failed to impress the audiences leading to a poor box-office collection of around 59 crores only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X