‘ஆண் பாவம் பொல்லாதது‘ ஓடிடியில் பாத்தீங்களா?.. ரியோ ராஜூக்கு குவியும் பாராட்டு!
சென்னை: ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம், வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இப்படம், சமீபத்தில், டிஸ்னி ஹாட் ஸ்டார், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஓடிடியில் படம் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒருமுறை சிறந்த ஜோடியாகப் பொருந்துகிறார்கள். அவர்களின் காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

படம் பார்த்த மற்றொரு பயனர், "ஆண் பாவம் பொல்லாதது, அஹா தமிழ் தளத்தில் பார்த்து முடித்தேன். சூர்யா பாலகுமாரன் மற்றும் அவரது குழுவின் சிறந்த படைப்பை கொடுத்துள்ளனர். ரியோ ராஜுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு சிறப்பான வெற்றிப் படமாக இது அமைந்துள்ளது என்று பகிர்ந்துள்ளார். இந்த விமர்சனங்கள் படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கின்றன.
ஆண் பாவம் பொல்லாதது: இப்படத்தின் கதை, ரியோ ஐடி வேலையில் வேலை பார்ப்பவராக இருக்கிறார். மாடர்ன் சிந்தனை கொண்ட மாளவிகா மனோஜை திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்யப்படுகிறது. ரியோ ராஜின் இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகளை பார்த்த மாளவிகா மனோஜ் இவர் தான் எனக்கு சரியான ஜோடி என்று முடிவு செய்கிறார். இதையடுத்து, இவர்களின் திருமணம் தடபுடலாக நடக்கிறது. ஆரம்பத்தில் ஓகே என்றாலும் அதன் பிறகு இருவருக்கும் சில முரண்பாடுகளால் முட்டி கொள்கிறது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பூகம்பமாக வெடிக்க, விவாகரத்து பெற கோர்ட் வாசலுக்கு செல்கின்றனர். அதன் பிறகு என்ன ஆனது, யார் பாக்கம் நியாயம், யார் வென்றார்கள்.. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்களா.. ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டார்களா என்பது தான் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் மீதிக்கதை.
சிறப்பான நடிப்பு: ஒரு அப்பாவி இளைஞனைச் சுற்றி படத்தின் கதையை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக தனது அளவான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளார். இந்த படத்திற்குபிறகு கண்டிப்பாக ரியோக்கு இன்னும் பெரிய வாய்புக்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரவின் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு, அசார் இசையமைத்துள்ளார். படம் வெளியான சில நாட்களிலேயே, ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை ஈர்த்து, சாதனை படைத்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், மக்கள் ரசனையையும் பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications











