Don't Miss!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஓடிடியை கலக்க வருகிறது ‘ஆர் யா பார்’
உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும் 'ஆர் யா பார்' இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் 'ஆர் யா பார்' தொடரின் அசத்தலான டிரெய்லரை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது. ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதை தான் இந்த தொடர். ஆக்ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை சித்தார்த் சென்குப்தா உருவாக்கியுள்ளார். Edgestorm Ventures LLP சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்
தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வில்வித்தையில் அசாத்திய திறமை கொண்ட சர்ஜு எனும் நாயகன் பாத்திரத்தில் ஆதித்யா ராவல் நடித்துள்ளார். பெரும் குற்றங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கூலிப்படை கொலையாளியாக அவர் மாறுகிறார். வஞ்சகமும் ஊழலும் மிகுந்த அரசியல்வாதிகள் சூழ்ந்த நவீன உலகில், தான் சார்ந்த பழங்குடியினரின் வாழ்விற்காக போராடுகிறார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான சித்தார்த் சென்குப்தா கூறுகையில்..,
"இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாக கலக்கும் போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும். பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்த தொடர் கூறுகிறது. அட்டகாசமான திரைக்கதை அருமையான நடிகர்கள், பரபரப்பான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்தும் இத்தொடரில் உள்ளது. உலகம் முழுக்க பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எங்கள் ஆர் யா பார் உலகை உலகளாவிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பது பெருமகிழ்ச்சி.
நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில்..,
சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார், மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான "ஆர் யா பார்" தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி.