Mission chapter 1: வெளியானது மிஷன் சாப்டர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.. எப்பன்னு தெரியுமா?
சென்னை: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இயக்குநர் ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்திருந்த யானை படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்த மிஷன் சாப்டர் ஒன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
அப்பா - மகள் சென்டிமென்ட்டை மையமாகக் கொண்டும் இந்த படத்தின் கதைகளம் அமைந்திருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக சிறப்பான வசூலை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி வெளியீடு கடந்த மாதத்திலேயே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்த நாளில் படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில் இம்மாதம் 15ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் ரிலீசாக வெளியான படம் மிஷன் சாப்டர் ஒன். இந்த படத்தின் கதைக்களம் முழுவதும் லண்டனில் நடப்பதாக அமைந்திருந்தது. படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. முன்னதாக ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்திருந்த அருண் விஜய்க்கு இந்த படமும் சிறப்பாகவே கை கொடுத்திருந்தது. இந்த படத்தில் அப்பா -மகள் சென்டிமென்ட் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது.
சிறப்பான வெற்றி: வெளிநாட்டில் சிக்கிக் கொள்ளும் அருண் விஜய் எப்படி அதிலிருந்து தப்பி உடல் நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளையும் காப்பாற்றுகிறார் என்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இதில் எமி ஜாக்சனுக்கும் சிறப்பான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளியாகாத நிலையில் மிஷன் சாப்டர் ஒன் அவருக்கு சிறப்பான ரீ என்ட்ரியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதத்திலேயே இந்தப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகவில்லை.
ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் மிஷன் சாப்டர் ஒன் படம் இந்த மாதம் 15ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் நாயகன் அருண் விஜய் இதை அறிவித்துள்ளார். அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மட்டுமில்லாமல் இளம் இயக்குனர்களுடனும் கைகோர்த்து படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த மிஷன் சாப்டர் 1: அயலான், கேப்டன் மில்லர், மெர்ரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களுடன் இணைந்து கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் கொண்டாட்ட ரிலீசாக வெளியானது மிஷன் சாப்டர் 1 படம். துவக்கத்தில் கேப்டன் மில்லர், அயலான் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களிலேயே மிஷன் சாப்டர் ஒன் படம் பிக்கப் செய்தது. படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டது. இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் அப்பா -மகள் சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.


Click it and Unblock the Notifications











