Pizza 3: The mummy: ஓடிடியில் வெளியான பீட்சா 3.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: நடிகர் அஸ்வின் லீட் கேரக்டரில் நடித்திருந்த பீட்சா 3 படம் கடந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
முன்னதாக பீட்சா மற்றும் பீட்சா 2 ஆகிய படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

அஸ்வினின் பீட்சா 3 ஓடிடியில் வெளியீடு: நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் பீட்சா. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ட்ரெண்ட்செட்டராகவும் அமைந்தது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய நடிப்பால் மிரட்டியிருந்தார். படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்தன.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் பீட்சா 2 : தி வில்லா என வெளியானது. தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பீட்சா 2 என பெயரிடப்பட்டிருந்தாலும் முந்தைய பாகத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்து. ஆயினும் முதல் பாகம் கொடுத்த அதீத திகில் அனுபவத்தை தர இந்தப் படம் தவறிவிட்டது. படத்தின் க்ளைமாக்ஸ் கிளாசா அமைந்திருந்தாலும் சாதாரண ஆடியன்சிற்கு புரியும் படியாக இல்லை என்பது குறையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அஸ்வின், காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பீட்சா 3 : தி மம்மி. இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற அதிகமான படங்களுடன் வெளியான நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பீட்சா 3 படத்தை பார்க்க, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன உணவகம் ஒன்றை நடத்திவரும் நளன், காவல் ஆய்வாளரின் தங்கை கயலை காதலிக்கிறார். இந்நிலையில் அவரது உணவகத்தில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் நளன் மீது அடுத்தடுத்து 2 கொலைப் பழிகள் விழுகின்றன. இதையொட்டிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ளது பீட்சா 3.
பழைய கட்டிடங்களுக்கிடையில் வரும் பேய் படங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தில் நவீன உணவகத்தில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் ரசிகர்களை ரசிக்கவே செய்துள்ளன. இரவில் நடக்கும் ஹாரர் காட்சிகள் ரசிகர்களை சிறப்பாகவே ஈர்த்துள்ளன. புதிய இயக்குநராக இருந்தாலும் பாத்திரங்களின் தேர்வில் கைத்தேர்ந்த அனுபவத்தை வெளிப்பாட்டியுள்ளார் இயக்குநர் மோகன் கோவிந்த். பீட்சா படத்தின் இரண்டாவது பாகம் ரசிகர்களை கவரத் தவறினாலும் பீட்சா 3 அந்தவகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











