ஓடிடி மூலம் ரீஎன்ட்ரியாகும் பரத் நடுங்க வைக்கும் 'நடுவன்' பட டிரைலர் - ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : நடிகர் பரத் இயக்குனர் ஷாரங் இயக்கத்தில் நடுவன் என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மலைப் பகுதிகளுக்கு நடுவே ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில் நடைபெறும் ஆச்சர்யங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
நடுவன் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இப்பொழுது டிரைலர் வெளியாகி இணையதளத்தை மிரட்டி வருகிறது.

இரண்டாவது இன்னிங்சை
நடிகர் பரத் இப்பொழுது தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வெற்றிகரமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஷாரங் இயக்கத்தில் த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.க்யூ என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

திருப்பங்கள் நிறைந்ததாக
வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமாக ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இப்படம் உருவாகியுள்ளது. மலைப் பகுதிக்கு நடுவே ஆளில்லாத தனி இடத்தில் நடைபெறும் சில அசாதாரண சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஓடிடியில் வெளியாகிறது
இதில் பரத்துக்கு ஜோடியாக நடிகை அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரமிக்கும் நடுவன் டிரைலர்
இந்த உலகத்துல நல்லா வாழ்ந்தவங்கள விட நம்பிக் கெட்டவங்க தான் அதிகம் என ஆரம்பமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தக்கூடிய விஷுவல் காட்சிகளுடன் கொலை,இருட்டு , திருப்பங்கள்,மலைப்பகுதி என ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் பின்னாடி இன்னொரு முகம் இருக்கு அந்த ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு கதை இருக்கும் என கூறும் நடுவன் டிரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 24ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











