Don't Miss!
- News
20+17+6.. திமுக போட்ட அதிரி புதிரி கணக்கு.. எனக்கு பின்னால் ஆள் இருக்கிறார்கள்.. எடப்பாடி "அஸ்திரம்"
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Finance
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஓடிடியில் வெளியாகும் லவ் டுடே படம்.. எப்ப தெரியுமா.. காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை : இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் ப்ளஸ் நடிப்பில் உருவாகி கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது லவ் டுடே படம்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் ப்ரமோஷன்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டிய நிலையில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது.
அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை லவ் டுடே படம் பீட் செய்து சாதனை படைத்துள்ளது.
100 கோடியை நெருங்கும் லவ் டுடே… பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோக்களை கதிகலங்க வைத்த பிரதீப்?

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்துள்ளது.கோமாளி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த பிரதீப், அந்தப் படத்தை பீட் செய்யும் வகையில் லவ் டுடே படத்தை வெற்றிப்படமாக கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
லவ் டுடே படத்திற்கு யுவன் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ட்ரெயிலர் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷனாக அமைந்தது. தொடர்ந்து பாடல்களும் சிறப்பான ப்ரமோஷனை படத்திற்கு கொடுத்தது. ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் கொடுத்த எதிர்பார்ப்புடன் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படம் சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.

தெலுங்கிலும் ரிலீஸ்
இந்தப் படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் இதுவரை 75 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்தப் படம் வசூல் செய்துள்ள நிலையில், தெலுங்கிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கில் முதல் நாளில் மட்டுமே 2 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலை இந்தப் படம் கொடுத்துள்ளது. தெலுங்கில் அஜித் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் முதல் நாள் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது.

தமிழ் -தெலுங்கில் சிறப்பான வரவேற்பு
தமிழ் மற்றும் தெலுங்கில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்
இந்த ஆண்டில் வசூல் மழையை பொழிந்த படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது லவ் டுடே. இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் இதன்மூலம் ஓடிடியில் பார்த்துக் கொள்ள முடியும். ஓடிடியிலும் லவ் டுடே படம் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

மீண்டும் வெற்றிப் பெற்ற லவ் டுடே டைட்டில்
கோமாளி என்ற படத்தின்மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், தன்னுடைய அடுத்தப்படத்திலேயே தானே ஹீரோவாக களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். லவ் டுடே என்ற விஜய் படத்தின் டைட்டிலைக் கொண்டு களமிறங்கியுள்ள பிரதீப், அந்த டைட்டிலை மீண்டும் வெற்றிப் பெற செய்துள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.