தியேட்டரில் மாஸ் காட்டிய ராயன்.. ஓடிடியில் எந்த தேதியில் ரிலீஸாகுது தெரியுமா?
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் ராயன். இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் ரூ.126 கோடியை வசூலித்த நிலையில், ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பா பாண்டி படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.. தம்பி, தங்கை மீது ஒட்டுமொத்த பாசத்தையும் வைத்த அண்ணன். தனது குடும்பத்திற்காக அடுத்தடுத்து கொலைகளை செய்து பாதுகாக்கிறார். ஒரு கட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த தம்பிகள் தனக்கு துரோகம் செய்துவிட, அடங்காத அசுரனாக மாறி ஒட்டு மொத்த கூட்டத்தையும் வதம் செய்கிறார்.

தனுஷின் ராயன்: ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பக்க பலமாக இருந்தது. படத்தை பார்த்த பலர் படம் வட சென்னை இரண்டாம் பாகம் போல இருக்கிறது என்றும், படத்தில் ஒரே ரத்தம், வெட்டு குத்து என நெட்டிவாக விமர்சனம் வந்தாலும் அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் நாளில் ரூ 13.65 கோடியை வசூலித்தது, இரண்டாவது நாளில் ரூ.13.75 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.15.25 கோடியை வசூலித்தது. உலக அளவில் உலகளவில் மொத்தம் ரூ.126 கோடியை வசூலித்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில், ராயன் படத்தின் ரிலீஸுக்கு பின் இதன் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் விடியோ வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராயன் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திரையரங்கில் வெளியாகி சரியாக 4 வாரங்கள் கழித்து படங்கள் ஓடிடியில் வெளியாகும் அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் 30ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், அவர்களின் சொந்த ஓடிடி தளமான சன்நெக்ஸ்டிலும் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











