Captain Miller OTT: ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த கேப்டன் மில்லர்.. எந்த தளம் தெரியுமா?

சென்னை: தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி வெளியான கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை, அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில், கன்னட நடிகர் ஷவ் ராஜ்குமார், சந்தீப் கிஷான், பிரியங்கா மோகன், அதிதி பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

தங்கள் முன்னோர்களால் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதனைப் பொறுக்க முடியாமல் தனுஷ் பிரிட்டீஷ் படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என நினைத்து பிரிட்டீஷ் படையில் சேருகிறார். ஆனால் அங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் உத்தரவிட, தனுஷ் அதிரடியாக அனைவரையும் சுட்டுக்கொன்று விடுகிறார். இதனால் குற்ற உணர்ச்சியில் கதறும் தனுஷ், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாகி புரட்சி கூட்டத்துடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்ப்பது தான் கேப்டன் மில்லர் படத்தின் கதை.

Actor Dhanush Captain Miller amazon Prime on february 9th

தனுஷின் அட்டகாசமான நடிப்பு: தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தில், தனுஷ் மூன்று விதமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தி முதல் நாள் நல்ல விமர்சனம் வந்ததால் படம் முதல் நாளில்,ரூ.16.29 கோடியும், 2ம் நாளில் ரூ.14.18 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.15.65 கோடியும் வசூல் ஆனது. படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் பொங்கல் விடுமுறையாக இருந்த போதும் படிப்படியாக சரிந்தது.

கதை என்னுடையது: ஒடுக்கப்பட்டோரின் வலியை பேசும் படமாக இப்படத்தை, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஒடுக்கப்பட்டோர் சுதந்திரத்திற்காக போராடும் கதை இது என்றும், என் மாமா இராணுவத்தில் அவர் என்னிடம் சொன்னதை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கியதாக கூறியிருந்தார். ஆனால், நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடைய என்றும், நான் எழுதிய பட்டத்துயானை நாவலை பின்னணியாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. தியேட்டரில் கேப்டன் மில்லர் படத்தை தவற விட்ட ரசிகர்கள் ஓடிடியில் படத்தை பார்க்க தயாராகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X