தனுஷின் மாறன் படம்... பொங்கலன்று ஓடிடியில் வெளியீடு

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் மாறன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படம் கவவையான விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் ஓடிடியில் வெளியானது. இதுகுறித்து தனுஷ் தனது அதிருப்தியை முன்னதாக வெளியிட்டிருந்தார்.

மாறன் படம்

மாறன் படம்

இந்நிலையில் தற்போது துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். மாளவிகா மோகனன் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் அப்டேட்

ரிலீஸ் அப்டேட்

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். படம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாகவும் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் பிறந்தநாளையொட்டி இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போஸ்டரில் ஒருவரின் தலையை கிளாஸ் டேபிளில் தனுஷ் அழுத்துவதாகவும் உடைந்த கண்ணாடித் துகள்களில் தனுஷின் வித்தியாசமான ரியாக்ஷன்கள் காணப்படுவதாகவும் இருந்தது.

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

தியேட்டர்கள் திறக்கப்பட்டு 100 சதவிகிதம் பார்வையாளர்களுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியானபோது தனுஷ் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

ஆயினும் கார்த்தி நரேன் முன்னதாக இயக்கியுள்ள படங்கள் அவரது மாறன் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனுஷ் கூட்டணியும் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இவர்களின் காம்போ படத்திற்கு மிகச்சிறந்த பலத்தை அளிக்கும் என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தை படம் கொடுக்கும் என்றும் நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X