பாடமெடுக்கும் தனுஷ்.. நெட்ப்ளிக்ஸில் வாத்தி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை : தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் ஒரு மாதத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், வெளியான திரைப்படம் வாத்தி. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்தது.
சம்யுக்தா, சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய் குமார், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் உருவான வாத்தி படத்தை, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷின் வாத்தி
இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுகில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், இப்படத்தில் இடம் பெற்ற வா வாத்தி பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக மாறி உள்ளது.

பாடமெடுக்கும் வாத்தி
அரசு பள்ளியின் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. இதற்காக தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த தனுஷை அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் தனியார் பள்ளியின் உரிமையாளர் சமுத்திரக்கனி. அந்தக் கிராமத்தில் 11வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்துவருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் அவர்களுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு வரவழைத்து, தேர்வில் தேர்ச்சி பெற செய்து அரசு பள்ளியை மேம்படுத்துகிறார்.

100 கோடி கிளப்பில் இணைந்த வாத்தி
அரசு பள்ளியின் வளர்ச்சியால் தனியார் பள்ளியின் வருமானம் பாதிக்கப்படும் என்று அரசு பள்ளியை செயல்படவிடாமல் பல இடையூறுகளை சமுத்திரக்கனி கொடுக்கிறார். தனுசை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி அதன் பின் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை. கடந்த மாதம் திரையரங்கில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலித்தது.

ஓடிடியில் வாத்தி
இந்நிலையில், வாத்தி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஒரு மாதம் ஆனநிலையில், இத்திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரையரங்கில் படத்தை பார்க்காமல் போன ரசிகர்கள் இந்த வார விடுமுறையை குடும்பத்தோடு டிவி முன் அமர்ந்து கொண்டாட உள்ளனர். ஓடிடியிலும் இந்த படம் ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











