ஓடிடியில் வெளியானது தனுஷின் நானே வருவேன் படம்.. வீட்டிலேயே பார்த்து மகிழும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் தனுஷின் நானே வருவேன் படம் கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது பாதி கவரத் தவறியதாக விமர்சிக்கப்பட்டது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மாறன் படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் எளிமையான திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

தொடர்ந்து ஒரு மாத இடைவெளியிலேயே நானே வருவேன் படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர தவறியது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் கதை, திரைக்கதையில் வெளியான இந்தப்படத்தை தாணு தயாரித்திருந்தார்.

ஹீரோ + வில்லன்

ஹீரோ + வில்லன்

தனுஷ் ஹீரோவாகவும் வில்லனாகவும் களமிறங்கியிருந்த நானே வருவேன் படத்தின் திரைக்கதை மற்றும் ஹாரர் திரில்லர் ஜானரில் படம் மிரட்டலான அனுபவத்தையே கொடுத்தது. ஆனால் இரண்டாவது பாதியில் படத்தில் கவனம் செலுத்த செல்வராகவன் தவறிவிட்டதாகவே விமர்சனங்கள் எழுந்தன.

பொன்னியின் செல்வனுடன் மோதல்

பொன்னியின் செல்வனுடன் மோதல்

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் படம் பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படத்துடன் மோதியதும் இதன் தோல்விக்கு காரணமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி படம் ரிலீசாகியிருந்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

இதனிடையே இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைமில் நேற்றைய தினம் படம் ரிலீசாகியுள்ளது. இதனிடையே திரையில் ரசிகர்களை கவரத் தவறிய இந்தப் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணைந்துள்ளார் தனுஷ். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X