Dhanush: தனுஷின் டி50 படத்தின் டிஜிட்டல் ரைட்சை வாங்கிய அமேசான்.. அடுத்த மாதம் முதல் அப்டேட்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தனுஷின் பயணம் டோலிவுட், பாலிவுட் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. ப பாண்டி படத்திற்கு பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ், தற்போது ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக டி50 படத்தை இயக்கி நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிவருகிறார்.

இளைஞர்களை வைத்து முற்றிலும் ரொமாண்டிக் ஜானரில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் நேற்றைய தினம் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக 4 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங்கில் நாகர்ஜூனா இணையவுள்ள நிலையில், இம்மாதம் 24ம் தேதி மும்பையில் நடக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Dhanushs D50 movie digital rights bagged by Amazon prime in India

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என திரைத்துறையில் பன்முகம் காட்டி வருகிறார். பள்ளி மாணவனாக கோலிவுட்டில் துவங்கிய தனுஷின் பயணம் தற்போது பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள தனுஷின் நடிப்பில் கடந்த 12ம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஒரே வாரத்தில் இந்தப் படத்தின் கலெக்ஷன் பல கோடிகளை தாண்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்தடுத்து இயக்கம்: வழக்கம்போல இந்தப் படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார் தனுஷ். பொங்கல் ரேஸில் பங்கேற்ற இந்தப் படம் வசூலில் பின்னி பெடலெடுத்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் டி50 மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக NEEK படத்தின் சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்ட இந்தக் கதையில் தனுஷ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

தனுஷின் டி50 படம்: இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்து தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள டி51 படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் பூஜையுடன் துவங்கியுள்ளது. நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 5 மொழிகளில் இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. முதல் நான்கு நாட்கள் நடக்கவுள்ள சூட்டிங்கில் நடிகர் நாகர்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தற்போது NEEK படத்தின் சூட்டிங்கில் தனுஷ் பிசியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் வரும் 24ம் தேதி இணையவுள்ளார்.

டி50 டிஜிட்டல் ரைட்ஸ்: இதனிடையே தனுஷ் இயக்கி முடித்துள்ள டி50 படத்தின் டிஜிட்டல் ரைட்சை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் அடுத்த மாதம் முதல் வெளியாகும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தனுஷின் 50வது படமான டி50 படத்தின் கதையை எழுதி இயக்கி நடித்துள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், நித்யா மேனன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X