Lucky Bhaskar: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டாகும் லக்கி பாஸ்கர்.. அட இப்படியொரு சாதனையா?
சென்னை: நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது லக்கி பாஸ்கர். அமரன், பிரதர், பிளடி பெக்கர் படங்களுடன் வெளியான நிலையில், அமரன் படத்திற்கு பிறகு மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது லக்கி பாஸ்கர். தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வசூலையும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் குவித்துள்ளது.
வங்கி ஊழியரான துல்கர் சல்மானின் அதிரடியை மையமாக வைத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்தப் படம் வெளியான நிலையில் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே பெற்றது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூலை எட்டிய நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

லக்கி பாஸ்கர் படம்: நடிகர் துல்கர் சல்மான் லீட் கேரக்டரில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான லக்கி பாஸ்கர் சர்வதேச அளவில் 100 கோடி வசூலை தாண்டி மாஸ் காட்டியது. தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில் அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தது லக்கி பாஸ்கர். படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவரது அதிரடியான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டு இருந்தது. படத்தில் மீனாட்சி சவுத்ரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஓடிடி ரசிகர்கள் கொண்டாட்டம்: ஒரு குழந்தைக்கு அம்மாவாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்த போதிலும் அவருக்கு படத்தில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்பட்டன. அதை அவர் சிறப்பாகவே பயன்படுத்தியிருந்தார். படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் மேற்கொண்ட நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தன. தமிழில் அமரன் படத்தையடுத்து லக்கி பாஸ்கர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் படத்தை ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
15 நாடுகளில் டாப்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் 15 நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷின் வாத்தி படத்திற்கு அடுத்தபடி அடுத்ததாக லக்கி பாஸ்கர் படம் வெளியான நிலையில், படம் இயக்குநருக்கும் நடிகருக்கும் மட்டுமில்லாமல் மீனாட்சி சவுத்ரிக்கும் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: கடந்த தீபாவளியையொட்டி ஜிவி பிரகாஷின் இசையில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் என அடுத்தடுத்த இரு படங்கள் வெளியான நிலையில், இரு படங்களுமே ரசிகர்களை இசையால் கவர்ந்ததுடன், பாக்ஸ் ஆபீசிலும் ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் லக்கி பாஸ்கர் படம் ஓடிடியிலும் சிறப்பான கவனத்தை பெற்று வருகிறது. இதன் காட்சிகளை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











