துல்கர் சல்மானுக்கு லக்காக அமைந்த லக்கி பாஸ்கர்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. இதோ விவரம்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் மலையாள நடிகராக இருந்த போதிலும் அவருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். நேரடியாக அவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியான லக்கி பாஸ்கர் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

படத்தில் பாஸ்கர் என்ற கேரக்டரில் துல்கர் சல்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான இந்த படம் அமரன் படத்தை அடுத்து தமிழில் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் மாஸ் கிளப்பிய இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

dulquer salman lucky bhaskar movie netflix ott

நடிகர் துல்கர் சல்மான்: நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது லக்கி பாஸ்கர். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக துல்கர் சல்மானின் படம் ஒன்று மட்டுமே ரிலீசான நிலையில் உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட கேப்பிற்கு பிறகு வெளியான போதிலும் துல்கர் சல்மானுக்கு லக்கி பாஸ்கர் படம் லக்காகவே அமைந்துள்ளது. வங்கி ஊழியராக பணக்காரராகும் ஆசையில் செயல்படும் மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியானது.

துல்கர் & மீனாட்சி சவுத்ரி ஜோடி: இந்த படத்தில் சுமதி என்ற கேரக்டரில் துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி. இவர்கள் இருவரின் காம்பினேஷன் இது முதல் முறை என்பதாலும் பிரஷ்ஷான ஜோடியாக அமைந்ததாலும் இவர்களின் காம்போ சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30ம் தேதி இந்த படம் netflix ottயில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி வெளியீடு: திரையரங்கில் சென்று இந்த படத்தை பார்த்த போதிலும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்துடன் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதனிடையே திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்களும் ஓடிடி ரிலீஸுக்காக வெயிட் செய்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. படத்தை சிதாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். அவரது இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அழுத்தமான கதைக்களம் மற்றும் சிறப்பான திரைக்கதையை கொண்டு திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடும் சிறப்பாக மற்றும் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் வாத்தி படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X