அரத பழைய கதை.. ஓடிடியில் அடிவாங்கிய சைரன்.. வருத்தத்தில் ஜெயம் ரவி!
சென்னை: குடும்பம், காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என எந்தவிதமான கதாபாத்திரத்திலும் பின்னி பெடல் எடுப்பவர் ஜெயம்ரவி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சைரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்விப்படமாக அமைந்தால், அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவே வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன், படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் இரண்டு பாகங்களும் கலேக்ஷனை அள்ளியது. அந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்த சைரன் திரைப்படத்தை பெரிதும் நம்பி இருந்தார்.

ஜெயம் ரவியின் சைரன்: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சைரன் திரைப்படம் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தின் தலைப்புக்கு ஏற்படியே படத்தில் அதிரடி தொடர் கொலை என படம் க்ரைம் திரில்லர் ஜனரில் இருந்தது. நல்ல ஒப்பனிங்கை பெற்ற இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பையும் கீர்த்தி சுரேஷின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.
சைரன் பட கதை: ஆம்புலன்ஸ் டிரைவரான (திலகன் வர்மா) ஜெயம் ரவி தனது மனைவி ஜெனிஃபரை கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவியின் தந்தைக்கு உடல்நிலை சாரியில்லாதால் பரோலில் வெளியே வருகிறார். ஜெயம் ரவி வெளியே வரும் நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. அந்த கொலையை செய்தது யார்? எதற்காக தொடர் கொலை நடக்கிறது என்பது தான் சைரன் படத்தின் மீதிக் கதை.
ஓடிடியில் எடுபடவில்லை: அகிலன், இறைவன் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயம் ரவி சைரன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால், இந்த படமும், தியேட்டருக்கு போன வேகத்திலேயே ஓடிடிக்கு திரும்பி வந்துவிட்டது. சைரன் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு விற்கப்பட்டுள்ளதால், இப்படம் 19ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஆனால் ஓடிடியிலும் பெருசாக சொல்லும்படி வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால், ஜெயம் ரவி வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர் தோல்வி: நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம்ரவி தற்போது தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், ஜெயம் ரவிக்கு மாமியாரின் ராசியால் தான் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய்விட்டது என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளதால், அடுதத படங்களில் மாமியாரை கிட்ட கூட சேர்க்காமல் வேறு ஒரு நல்ல தயாரிப்பாளர்களிடம் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை, ப்ரதர், ஜீனி, தனி ஒருவன் 2 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











