Siren OTT: தியேட்டரில் கெத்து காட்டிய சைரன்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான திரைப்படம் சைரன். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவரான (திலகன் வர்மா) ஜெயம் ரவி தனது மனைவி ஜெனிஃபரை கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவி உடல்நிலை சரியில்லாத தந்தையைப் பார்க்க பரோலில் வெளியே வருகிறார். ஜெயம் ரவி வெளியே வரும் நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது.

Actor Jayam ravis siren ott release date

செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலீஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக நடக்கும் கொலைகளுக்காக ஒரே நேர்கோட்டில் இணைகின்றனர். இந்த கொலைகளை திலகன் செய்திருப்பாரோ? என்ற சந்தேகம் போலீஸ் அதிகாரியான நந்தினிக்கு (கீர்த்தி சுரேஷ்) ஏற்படுகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை எமோஷனல் கலந்து சொல்லும் படமே சைரன்.

சைரன் படத்தின் கதை: இந்த படத்தில், இளம் தோற்றம், வயதான தோற்றம் என இரு வேறு பரிமாணங்களில் நடிப்பில் மிரட்டுகிறார் ஜெயம் ரவி. ஆம்புலன்ஸ் ஓட்டுநராக அவரின் வேகமும், பரோலில் வந்த பிறகு இருக்கும் முதிர்ச்சியும் அவரது நடிப்பின் எதார்த்தத்தை ரசிகர்களுக்கு அழகாக கடத்தி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக மகளுடனான பாசப்போராட்டத்தில் நெகிழ வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து இருக்கலாம் என்று படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இரண்டு நாள் வசூல்: இத்திரைப்படம் முதல் நாளில் 1.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இரண்டாவது நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்த போதும், 1.73 கோடி கலெக்ஷனை பெற்றதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் சைரன் திரைப்படம் 3.13 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில், சைரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சைரன் படம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்கு விற்கப்பட்டது. திரைப்படம் அதன் திரையரங்குகள் முடிந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் ஓடிடி இயங்குதளத்தில் வரக்கூடும். இருப்பினும், சைரனின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட் நிறுவனமே வெளியிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X