Actor Jayaram: ஓடிடியில் வெளியாகும் ஜெயராமின் ஆப்ரஹாம் ஓஸ்லர்.. எப்ப தெரியுமா?

சென்னை: சமீபத்திய மலையாள படங்கள் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகி வருகின்றன. மலையாளத்தில் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு படங்கள் வெளியாகும். அந்த வகையில் சமீபத்திய திரைப்படங்கள் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரேமலு உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசுலையும் குவித்து வருகின்றன, மலையாளத்தை காட்டிலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழில் மிகச் சிறப்பான வசூலை குவித்து வருகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை மற்றும் அந்த படத்தின் கண்மணி பாடல் இடம் பெற்றது மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஜெயராம் நடித்து கடந்த ஜனவரியில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற ஆப்ரஹாம் ஓஸ்லர் மலையாள படம் இன்னும் சில தினங்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆடு, ஆடு 2, அஞ்சாம் பதிரா உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள மிதுன் மானுவல் தாமஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயராம் லீட் கேரக்டரில் ஆபிரகாம் ஓஸ்லர் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் படத்தில் மம்முட்டி கேமியோ ரோலில் நடித்திருந்தது படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

Actor Jayaram s Abraham Ozler movie OTT release update is here

நடிகர் ஜெயராம்: நடிகர் ஜெயராம் கடந்த 2020ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மகள் என்ற படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டு வருடங்களாக மலையாளத்தில் அவர் படம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது நடிப்பில் ஆப்ரஹாம் ஓஸ்லர் என்ற படம் கடந்த ஜனவரியில் மலையாளத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட நடிகர் கார்த்தி, நம்பி சார் கெட்டப் சூப்பர் என்று கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.

ஆப்ரஹாம் ஓஸ்லர் படம்: க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படத்தில் ஜெயராம் ஆப்ரஹாம் ஓஸ்லர் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார். ஆடு, ஆடு 2 மற்றும் அஞ்சாம் பதிரா உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த மலையாள இயக்குனர் மிதுன் மானுவல் தாமஸ் இந்த படத்தை இயக்கியிருந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியையும் சிறப்பான கம்பேக்கையும் ஜெயராமிற்கு கொடுத்தது. படத்தில் நடிகர் மம்முட்டியின் கேமியோ கேரக்டர் மிகப்பெரிய வலிமையை கொடுத்தது. இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில் மிதுன் முகுந்தன் இசையமைத்திருந்தார்.

Actor Jayaram s Abraham Ozler movie OTT release update is here

ஓடிடி ரிலீஸ் அப்டேட்: 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் சர்வதேச அளவில் 40 கோடிகளை தாண்டி வசூலித்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அடுத்தடுத்து தொடர் கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக ஜெயராம் நடித்திருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதையை ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். படத்தை படத்தின் இயக்குனர் மிதுன் மானுவல் தாமஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மம்முட்டியும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கலையொட்டி வெளியான இந்த படம், அடுத்ததாக வரும் 20ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மலையாளப் படங்கள் அடுத்தடுத்து கவனம் பெற்று வரும் நிலையில், தமிழ், தெலுங்கு ஆடியன்சும் இந்தப் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படம் மூலம் நடிகர் ஜெயராம் மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை மலையாளத்தில் துவங்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜெயராமின் அழுத்தமான நடிப்பு மற்றும் மம்முட்டியின் கேரக்டர் ஆகியவை சிறப்பு சேர்த்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆப்ரஹாம் ஓஸ்லரின் இரண்டாவது பாகத்தை உருவாக்கவும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X