Junior NTR: திரையில் மேஜிக் செய்த ஜூனியர் என்டிஆர்.. தேவரா படத்தின் ஓடிடி அறிவிப்பு இதோ!
ஐதராபாத்: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்த தேவராபடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மாஸ் காட்டியது. கொரட்டலா சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
அனிருத் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து கொண்டாட செய்தன. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தன. இதனிடையே, இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர் டோலிவுட்டின் மிகவும் மாஸான ஹீரோவாக அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு இயக்குநர் கொரட்டாலா சிவாவுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த தேவரா படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக ரிலீசானது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்காக சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து மாஸ்காட்டினர்.
தேவரா படம்: தேவரா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மிகப்பெரிய வசூலை பெற்று ஜூனியர் என்டிஆருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் மூலம் அவர் தென்னிந்திய மொழி படங்களில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அவர் அடுத்ததாக ராம்சரணுடன் இணைந்து நடிக்கவும் கமிட் ஆகியுள்ள நிலையில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூரின் ஜோடி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதேபோல இந்த படத்தில் அனிருத் இசையும் ரசிகர்களை கட்டி போட்டது.
ஓடிடி ரிலீஸ்: படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் இசை ரசிகர்களை கொண்டாட செய்தன. இந்நிலையில் இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனிடையே தேவரா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 8ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற சினிமா ரசிகர்களும் இந்த படத்தை ஓடிடியில் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். திரையரங்குகளில் மாசான வரவேற்பை பெற்ற ஜூனியர் என்டிஆரின் தேவேரா படம் ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியீடு: ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக தேவரா படம் உருவாகியிருந்தது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி இந்தப் படம் வெளியான நிலையில் சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய்களுக்கு மேல் படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தமிழ், தெலுங்'கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் அடுத்த பாகத்திற்கான சூட்டிங்கை படக்குழுவினர் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











