வசூலில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா.. ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா மக்களே?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான தேவரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் இணைந்திருந்தார். அவர் இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

படம் பான் இந்தியா படமாக உருவாகியிருந்த நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் இணைந்திருந்தார். படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஹைப் காணப்பட்ட நிலையில், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. அரதப்பழசான கதையை இந்தப் படத்தில் கொரட்டாலா சிவா எடுத்துக் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

junior ntr devara movie ott

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர் முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் டான்ஸ், நடிப்பு என்று அதகளம் செய்திருந்தார். படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரணுடன் இவர் சிறப்பான நடனத்தை கொடுத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்ட நிலையில், படமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் இணைந்து தேவரா என்ற படத்தை கொடுத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தப் படம் இவரது 30வது படமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

தேவரா படம்: பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்திற்காக மிக அதிகப்படியான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்திருந்தனர். சென்னையிலும் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் படம் கடந்த 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மிகவும் அரதப்பழசான கதைக்களத்தை இந்தப் படத்தில் கொரட்டாலா சிவா கையாண்டுள்ளது குறித்தும் விமர்சிக்கப்பட்டது. ஆயினும் படம் சிறப்பான கலெக்ஷனை பெற்று வருகிறது.

junior ntr devara movie ott

வசூல் சாதனை: முதல் நாளிலேயே படம் 172 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தினங்களில் இந்தப் படத்தின் வசூல் 243 கோடி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் நாளை காட்டிலும் நேற்றைய தினம் படத்தின் கலெக்ஷன் பாதியாக குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே இன்றைய தினம் விடுமுறை தினமென்பதால் இந்த 3 நாட்களின் கலெக்ஷன் 300 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போதே சமூக வலைதளங்களில் வலம்வர துவங்கியுள்ளன. இந்தப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ் அப்டேட்: இதனிடையே தேவரா படம் நவம்பர் மாதம் 15ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சையிப் அலிகான் ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, ஸ்ருதி, ஷைன் டாம் சாகோ, முரளி ஷர்மா, நரேன், கலையரசன், சைத்ரா ராய் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முன்னதாக சிரஞ்சீவி, ராம்சரண் கூட்டணியில் வெளியான ஆச்சார்யா என்ற தோல்விப்படத்தை இயக்கியிருந்த கொரட்டாலா சிவாவுடன் தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X