Junior NTR: அதிரடி சரவெடியாக ஓடிடியில் வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஐதராபாத்: நடிகர் ஜூனியர் என்டிஆர் டோலிவுட்டின் சூப்பர்ஹிட் ஹீரோவாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். சிறப்பான சினிமா பின்புலத்திலிருந்து நடிக்க வந்த போதிலும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு மற்றும் டான்ஸ திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவரா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

தேவரா படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்த நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான் கபூர் இணைந்திருந்தார். இதன்மூலம் அவர் தென்னிந்திய படங்களில் தன்னுடைய என்ட்ரியை துவங்கியுள்ளார். அடுத்ததாக ராம்சரணுடன் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

junior ntr devara movie netflix ott

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரிலீசானது தேவரா படம். கொரட்டாலா சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மிகச்சிறப்பான ஆக்ஷன் என்டர்டெயினரை ஜூனியர் என்டிஆர் கொடுத்திருந்தார். அவரது ரசிகர்களை வெகு சிறப்பாக இந்தப் படம் என்டர்டெயின் செய்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கான வரவேற்பும் வசூலும் குறையவில்லை. இந்தப் படத்தின் அட்ராக்ஷன்களில் மற்றொரு விஷயமாக இந்தப்படத்தின் நாயகி ஜான்வி கபூர் அமைந்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தேவரா படம்: இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பாடல் காட்சிகளில் இவர்களின் காம்பினேஷன் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. பாடல்களில் இசையமைப்பாளர் அனிருத் அதிரடியாக செயல்பட்டுள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்களை அடுத்தடுத்து குத்தாட்டம் போட செய்தது. பின்னணி இசையிலும் அனிருத் மிரட்டியிருந்தார். தேவரா படத்தின் சிறப்பான இசைக்கு கிடைத்த வரவேற்பையடுத்து அவர் அடுத்தடுத்த தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

ஓடிடியில் வெளியான தேவரா படம்: படம் திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில், அடுத்ததாக ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தேவரா படம் வெளியாகியுள்ளது. முதலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் படம் வெளியாகவுள்ளதாகவும் விரைவில் இந்தியிலும்வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் அப்பா -மகன் என இருவேறு கெட்டப்புகளில் இந்தப் படத்தில் அதிரடி காட்டிய நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பழிவாங்கும் கடத்தல்காரனை மையமாக வைத்து தேவரா படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.

ரசிகர்கள் ஆர்வம்: இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர், சைஃப் அலிகான் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் பிரகாஷ் ராஜூம் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் விரைவில் இந்தப் படத்தின் இரண்டாவதுபாகத்திற்கான வேலைகளை படக்குழுவினர் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாகி கடந்த செப்டம்பர் 27ம் தேதி இந்தப் படம் ரிலீசான நிலையில் தற்போது இந்தப் படத்தை மீண்டும் ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X