காளி வெங்கட்டிற்கு அடித்த ஜாக்பாட்.. ஓடிடியில் வரவேற்பை பெற்ற ‘மெட்ராஸ் மேட்னி’

சென்னை: கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் நடித்த திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இத்திரைப்படம் ஜூன் 6ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் ஓடிடி வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் மேட்னி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. கே.சி. பாலா சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்தில் காளிவெங்கட், சத்யராஜ், சாம்ஸ், விஸ்வா, ஷெல்லி கிஷோர், கீதா கைலாசம், மரியம் ஜார்ஜ், ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Kaali venkat sathyaraj OTT
Photo Credit:

மெட்ராஸ் மேட்னி: துப்பறியும் நாவல் எழுதும் எழுத்தாளரான சத்யராஜுக்கு, ஒரு பெண் சாதாரண மக்கள் பற்றி கதை எழுதுங்கள் அதன் மூலம் உங்களுக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்று சொல்ல,அதை ஏற்று கொண்ட சத்யராஜ், சாதாரண மக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல இடத்திற்கு செல்கிறார். கடைசியாக சத்யராஜ் ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு, ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் வருகிறார். காளி வெங்கட், தனக்கு கிடைக்கும் சிறிய வருமனத்தை வைத்து தன் மகன், மகளை எப்படியாவது பெரிய ஆட்கள் ஆக வேண்டும் போராடுகிறார்.

படத்தின் கதை : காளி வெங்கட்டின் மகள் ரோஷினி ஒரு நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாயாவது தர வேண்டும் என காளி வெங்கட் நினைக்கிறார். அதே நேரத்தில், மகனை இஞ்ஜினியர் படிக்க வைக்கவும் பணம் தேவைப்படுகிறது. என வாழ்க்கையை நடத்த பல போராட்டமே நடத்துகிறார். இதெல்லாம் அவரை எங்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து வந்த காளி வெங்கட், ஏன் பாருக்கு வந்தார் என்பது தான் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் கதை.

குவியும் பாராட்டு: தியேட்டரில் படம் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா, சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4 ஆம் தேதி வெளியானது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறிய பலரும் ஓடிடியில் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக காளி வெங்கட்டின் எதார்த்தமான நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X