பிக்பாஸ் கவினின் ரொமான்டிக் வெப்சீரிஸ் ‘ஆகாஷவாணி‘ … ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

பிக் பாஸ் கவின் நடிக்கும் ஆகாஷவாணி வெப் தொடரின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Recommended Video

விரைவில்!! தமிழில் தொடங்கும் Bigg Boss OTT| Vanitha, Anitha, Julie

பீஸ்ட் திரப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.

அடுத்ததாக விக்னேஷ் சிவன்,நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் ஊர்குருவி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கவின்

கவின்

சரவணன் மீனாட்சி முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, சரவணன் மீனாட்சி 2 வெளியானது. இதிலும், கவின் மற்றும் ரச்சிதா ஜோடி போட்டு நடித்திருந்தனர். இந்த தொடரும் வெற்றிகரமாக பல வாரங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரவணன் மீனாட்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விஜய் டிவியின் விருதையும் வென்றார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் கவின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் கவின் நெருங்கி பழகினர். இதனால், இவர்கள் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் எப்போதும் அந்த வீட்டில் நெருக்கமாக அமர்ந்து பேசுவது வழக்கமாக இருந்தது. இதனால் பல சர்ச்சைகைள் ஏற்பட்டது. பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் வெளியேறினார்.

லிப்ட

லிப்ட

இதையடுத்து, கவின் வினீத் வரப்பிரசாம் இயக்கி உள்ள லிப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடியில் ரிலீஸானது ஒரு லிப்டுக்குள் நடக்கும் அமானிஷியம் இப்படத்தில் அழகாக காட்டப்பட்டு இருந்தது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்திருந்தார்.

ஆகாஷ் வாணி

ஆகாஷ் வாணி

இந்நிலையில், பிக் பாஸ் கவின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த சீரிஸை அட்லீயின் உதவி இயக்குனரான எனோச் எபிக் இயக்கியுள்ளார். இந்த வெப்தொடர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த ரொமான்டிக் வெப் தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X