Lover Movie OTT release: பட்டையை கிளப்பும் லவ்வர் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: நடிகர் மணிகண்டன் லீட் கேரக்டரில் நடித்து கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது லவ்வர் படம். இந்தப் படத்தில் காதலும் காதல் நிமித்தமும் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது. முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்த நிலையில், அடுத்ததாக அவரது லவ்வர் படம் வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், வசூலில் சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படத்துடன் இந்தப் படமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது.

மணிகண்டன் மற்றும் ஸ்ரீகௌரி பிரியா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான லவ்வர் படம் சிறிய பட்ஜெட்டில்தான் உருவானது. காதலர் தினத்தையொட்டிய வாரத்தில் ரிலீசாகியுள்ள இந்தப் படம் காதலர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் அடுத்தடுத்த நாட்களில் ஏராளமான ரசிகர்களை இழுத்து வந்துள்ளது. படத்தின் வசூல் கடந்த 5 நாட்களில் 6 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் காதலையும் தற்காலத்திய காதலர்களிடம் ஏற்படும் பிரச்சினைகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

Actor Manikandans Lover movie OTT streaming update is here

லவ்வர் படம்: நடிகர் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லவ்வர். அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்களை அதிகளவில் திரையரங்குகளை நோக்கி வர செய்துள்ளது. காதலர் தினத்தை ஒட்டிய வாரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளதால் இந்த படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. படத்தில் மேலும் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது.

காதலர்களின் பிரச்சினை: ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பின்னணி இசை கவனத்தை பெற்றுள்ளது. தற்காலத்தில் சமூகத்தில் நிலவும் காதல் மற்றும் காதலர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் உறவு பற்றிய ஒரு உரையாடலாக இந்த படம் அமைந்துள்ளது. கடந்த வாரத்தில் வெளியான லவ்வர் படம் முதல் ஐந்து நாட்களில் ஆறு கோடிக்கும் மேல் சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியீடு: முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள லவ்வர் படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் அவர் ஏற்றுள்ள கேரக்டருக்கு மிக சிறப்பான நியாயத்தை அவர் செய்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லவ்வர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. வரும் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் லவ்வர் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி மணிகண்டன் நடித்து வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் அவர் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியை லீட் கேரக்டரில் வைத்து அவர் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் கவரப்பட்டு வருகின்றனர். எப்போதுமே பக்கத்து வீட்டுப் பையன் லுக்கில் இருக்கும் நடிகர்களுக்கு தமிழ் சினிமா சிறப்பாக கை கொடுக்கும். அந்த வகையில் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து தற்போது அந்த லிஸ்டில் மணிகண்டனும் இணைந்துள்ளார்.

நடிகர் மணிகண்டன்: குட் நைட் அவருக்கு சிறப்பான வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ள நிலையில் லவ்வர் படம் சிறிது பின் தங்கியுள்ளது. இருந்தபோதிலும் அவர் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளது. காதலர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதையொட்டி அவர்களின் அடுத்தடுத்த நகர்வுகளை இந்தப் படம் பேசியுள்ள நிலையில், படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X